கேரளாவைப் போல உபி மாறினால்.. யோகி ஆதித்யநாத்துக்கு பட்டியலிட்டு பதிலளித்த பினராயி விஜயன்!
திருவனந்தபுரம்: உத்தரப்பிரதேசம் கேரளா போல ஆகிவிடும் என யோகி ஆதித்யநாத் கூறியிருந்த நிலையில், கேரள முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
உத்தரப் பிரதேசம் கேரளாவாக மாறினால் நல்ல கல்வியும், சுகாதார சேவைகளும் கிடைக்கும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தன்னுடைய டிவிட்டரில் பதில் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன் முதற்கட்ட தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

யோகி ஆதித்யநாத்
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்று வரும் முதற்கட்ட தேர்தலுக்காக, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், தேர்தலின் போது நீங்கள் தவறு செய்துவிட்டால், காஷ்மீர், கேரளா, பெங்கால் போல உத்தரப்பிரதேசம் மாற அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளாது. இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

சர்ச்சை
என்னுடைய ஐந்து ஆண்டு உழைப்புக்கு, உங்கள் ஓட்டுகள் தான் வாழ்த்தாக அமையும். குற்றம் இல்லாத, பயம் இல்லாத, கலவரம் இல்லாத மாநிலமாக உத்தரப்பிரதேசத்தை மாற்ற உங்கள் ஓட்டு வழிவகுக்கும்'' என்று பேசி இருந்தார். யோகி பேசிய சர்ச்சையானது. அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

பினராயி விஜயன்
இந்நிலையில், யோகியின் பேச்சுக்கு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் பதிலளித்துள்ளார். பினராயி விஜயன் தன்னுடைய ட்விட்டரில் யோகி ஆதித்யநாத்தை குறிப்பிட்டு, ''யோகி ஆதித்யநாத் பயப்படுவது போல உத்தரப் பிரதேச மாநிலம் கேரளாவாக மாறினால், அந்த மாநிலத்திற்கு சிறந்த கல்வி கிடைக்கும். சுகாதார சேவைகள் மேம்படும்.

மக்கள் விரும்புவார்கள்
கேரளாவைப் போல மாறினால, அங்கு சமூக நலம் மேம்படும், வாழ்க்கைத் தரம் உயரும், சமூகத்தில் ஒற்றுமையும் நல்லிணக்கமும் நிலவும், ஜாதி, மதத்தின் பெயரால் யாரும் கொலை செய்யப்பட மாட்டார்கள். அதுபோன்றதைத்தான் உத்தரப்பிரதேச மக்களும் உண்மையில் விரும்புவார்கள்'' என்று தன்னுடைய ட்விட்டரில் பதிலளித்திருக்கிறார் பினராயி விஜயன்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications