சபரிமலையில் பெண்களுக்கு தடை விதிக்க முடியாது... பினராயி திட்டவட்டம்
திருவனந்தபுரம்: சபரிமலையில் பெண்களுக்கு தடை விதிக்க முடியாது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும், சபரிமலையில் பெண்களுக்கு தடை விதித்து சட்டம் இயற்ற முடியாது எனவும் அவர் கேரள சட்டப்பேரவையில் ஆணித்தரமாக கூறிவிட்டார்.
இதனால் கேரளாவில் சபரிமலை விவகாரத்தை மையமாக வைத்து மீண்டும் போராட்டங்கள் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

பினராயி முடிவு
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு தடை விதித்து சட்டம் இயற்றக் கோரி கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், பினராயி தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். கேரளாவில் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அரசு பின்பற்றும்
சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை கேரள அரசு பின்பற்றும் என அவர் தெரிவித்துள்ளார். சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பினராயி துணிச்சல்
உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தக் கூடாது என கடந்த ஆண்டு கேரளாவில் போராட்டங்கள் வெடித்தன. ஆனால் பினராயி விஜயன் அனைத்தையும் துணிச்சலாக எதிர்கொண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துவதில் இருந்து பின்வாங்கவில்லை.

திட்டவட்டம்
பெண்களின் அடிப்படை உரிமை சார்ந்த விவகாரம் என்பதால் அதில் தனது அதிகாரத்தை திணிக்க முடியாது என்றும், பெண்களை சபரிமலைக்கு செல்லுமாறு தனது அரசு நிர்பந்திக்கவில்லை எனவும் கூறியுள்ளார். சபரிமலைக்கு செல்வதும், செல்லாமல் இருப்பதும் பெண்களின் முடிவு என சாதுர்யமாக பதில் தெரிவித்துள்ளார் பினராயி.

விமர்சனம்
முதலமைச்சர் பினராயி விஜயனின் இந்த பதிலுக்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, விமர்சனங்களையும் முன் வைத்துள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications