வெளிநாடு செல்ல அனுமதி மறுத்த மத்திய அரசு.. கேரள முதல்வரின் யுஏஇ பயணம் ரத்து.. காரணம் இதுதான்!
திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் அபுதாபியில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள திட்டமிட்டு இருந்தார். இதற்காக மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டு இருந்தது. கிட்டத்தட்ட ஒரு மாதமாக கிடப்பில் போட்ட மத்திய அரசு தற்போது அனுமதி கொடுக்க மறுப்பு தெரிவித்தள்ளது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பினராயி விஜயன் உள்ளார். நாட்டிலேயே கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் உள்ள ஒரே மாநிலம் கேரளாதான். இங்கும் எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ள நிலையில், பாஜகவும் அங்கு தீவிர அரசியல் செய்து வருகிறது. கேரள முதல்வர் பினராயி விஜயனும், அவ்வப்போது மத்திய அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

இதனிடையே, ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வருமாறு கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு ஐக்கிய அரசு அமீகரத்தின் வர்த்தகத்துறை அமைச்சர் அழைப்பு விடுத்து இருந்தார். பினராயி விஜயன் மருமகனும் அமைச்சருமான முகம்மது ரியாஸ், கேரள உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்ததது.
இந்த அழைப்பை ஏற்று ஐக்கிய அரபு அமீரகம் வருவதாக பினராயி விஜயனும் சம்மதம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. தான் வெளிநாடு செல்வதற்காக முறைப்படி மத்திய அரசிடம் பினராயி விஜயன் அனுமதி கோரியிருந்தார். இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு முதலில் அனுமதி கேட்கப்பட்டு இருந்தது.
ஆனால், முதல்வர் கலந்து கொள்ளும் அளவிற்கு இது அவ்வளவு முக்கிய மாநாடு இல்லை என்று கூறிய வெளியுறவுத்துறை அமைச்சகம் அனுமதி மறுப்பதாகவும் அதிகாரிகள் மட்டும் செல்லலாம் என்று கூறியது. இதையடுத்து, பிரதமர் அலுவலகத்திடம் கேரள முதல்வர் அலுவலகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக முடிவில் தலையிட முடியாது எனக் கூறி பிரதமர் அலுவலகமும் மறுத்து விட்டது.
இதனால், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் மாநாட்டில் பினராயி விஜயன் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து முதல்வர் தனது திட்டத்தை ரத்து செய்தார். முதல்வர் பினராயி விஜயனுக்கு பதிலாக தலைமை செயலாளர் தலைமையிலான உயர்மட்ட குழு ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறது.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications