விபத்தில் சிக்கிய கேரள முதல்வர் பினராயி விஜயனின் கார்.. அடுத்தடுத்து மோதிய 5 கான்வாய் வாகனங்கள்!
திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயனின் கான்வாய் வாகனங்கள் இன்று சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஒன்றின் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பயணித்த வாகனம் லேசாக சேதமடைந்த நிலையிலும், அவர் காயமின்றி தப்பினார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று மாலை கோட்டயத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு சென்று கொண்டிருந்தார். திருவனந்தபுரம் வாமனபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் கான்வாய் வாகனங்கள் இன்று மாலை சென்று கொண்டிருந்தன. அப்போது திடீரென கான்வாய் வாகனங்களுக்கு முன்னால், இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர் குறுக்கே வந்துள்ளார்.

இதையடுத்து அந்த ஸ்கூட்டர் மீது மோதாமல் தவிர்ப்பதற்காக கான்வாய் வாகனம் திடீரென பிரேக் போட்டது. இதையடுத்து, பின்னால் வந்த வாகனங்கள் ஒன்றின் மீது ஒன்று மோதின. இந்த விபத்தில், நெருக்கமாக வந்து கொண்டிருந்த ஐந்து கான்வாய் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்ற வாகனம் சிறிதளவு சேதம் அடைந்தாலும், அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. சிறிது நேரம் தாமதத்திற்குப் பிறகு தொடர்ந்து, அவர் பயணத்தை தொடர்ந்துள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications