கலெக்டர் திவ்யா ஐயர் கிளப்பிய பகீர்.. என்னாது 8 வயதிலா? வெடித்து கிளம்பும் பாலியல் புகார் பரபரப்பு
திருவனந்தபுரம்: தான் சிறுவயதாக இருந்த போது பாலியல் சீண்டலுக்கு உள்ளானதாகவும், அதிலிருந்து கஷ்டப்பட்டு தப்பித்ததாகவும் கேரள கலெக்டர் திவ்யா எஸ் ஐயர் கூறியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து வெளிப்படையாக பெண்கள் பேச வேண்டும் எனும் முழக்கம் சமீப காலமாக தீவிரமாக எதிரொலித்து வருகிறது. இந்நிலையில்தான் பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு தான் சிறுவயதில் எதிர்கொண்ட விரும்பத்தகாத சம்பவங்கள் குறித்து வெளிப்படையாக கூறினார். அதாவது, "பெண்களோ, ஆண்களோ அவர்கள் சிறுவர்களாக இருந்தபோது எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் பெரியவர்களாக மாறிய பின்னரும் வடுவாக நீடிக்கும்.
நானும் இது போன்று ஒரு துன்பத்தை எதிர்கொண்டிருக்கிறேன். எனக்கு 8 வயது இருந்தபோது என்னுடைய சொந்த தந்தையால் நான் பாலியல் சீண்டல்களை அனுபவித்தேன். அந்த வயதில் இது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. என்னை சுற்றி என்ன நடக்கிறது என்பது கூட எனக்கு சரியாக புரியாத வயது அது. இது குறித்து வெளியில் சொன்னால் எனது சகோதரனை ஏதாவது செய்துவிடுவேன் என்று அவர் எச்சரித்தார். எனது குடும்பத்தின் மீது எனக்கு மிகுந்த அன்பு இருந்தது. அதுதான் அவரை இவ்வாறு செய்ய வைத்திருந்தது. அப்போது நடந்த சம்பவம் குறித்து என்னால் 15 வயதில்தான் குரல் கொடுக்க முடிந்தது" என்று கூறியிருந்தார்.

குஷ்பு
இது நாடு முழுவதும் பேசு பொருள் ஆனது. பெண்கள் தாங்கள் எதிர்கொண்ட கொடுமைகள் குறித்து வெளிப்படையாக பேச வேண்டும். இதனை இந்த ஆணாதிக்க சமூகம் காது கொடுத்து ஏற்று அவமானப்பட வேண்டும். அப்படியாவது இச்சமூகம் திருந்த வேண்டும் என்பதைதான் குஷ்பு இந்த விஷயத்தின் மூலம் மறைமுகமாக தெரிவித்திருக்கிறார் என மகளிர் அமைப்புகள் கூறின. அதேபோல குஷ்புவை தொடர்ந்து டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மலிவால், "குஷ்புவை போலவே நானும் எனது தந்தையால் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியுள்ளேன். சிறுவயதில் எனது தந்தை என்னை பயங்கரமாக அடிப்பார். அதேபோல என்னிடம் பாலியல் சில்மிஷத்திலும் ஈடுபட்டுள்ளார்.

ஸ்வாதி மலிவால்
அவரிடமிருந்து நான் தப்பிக்க கட்டிலுக்கு அடியில் மறைந்துகொள்வேன். இந்த எண்ணம்தான் பெண்களுக்கு எப்படி அதிகாரம் அளிப்பது? என்கிற சிந்தனையை நோக்கி என்னை உந்தி தள்ளியது" என்று கூறினார். இந்நிலையில் இவரை தொடர்ந்து கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தின் ஆட்சியர் திவ்யா எஸ் ஐயர் தான் சிறுவயதில் எதிர்கொண்ட பிரச்னைகளை கூறியுள்ளார். நேற்று(மார்ச் 28) பத்தினம்திட்டாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த அவர், "நான் சிறுவயதாக இருந்தபோது கல்வியில் அதிகம் நாட்டம் இருந்தது. வகுப்பில் எப்போதும் நான்தான் முதல் மதிப்பெண் பெறுவேன்.

திவ்யா எஸ் ஐயர்
இது எனது பெற்றோருக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. அவர்கள் என்னிடம் மிகவும் அன்பாக இருந்தார்கள். எனது அக்கம் பக்கத்தினரும் என்னிடம் அன்பாக பழகினர். இப்படி இருக்கும்போதுதான் எங்கள் வீட்டிற்கு இரண்டு இளைஞர்கள் வந்தார்கள். அவர்களின் முகங்கள் எனக்கு இப்போது வரை நினைவில் கிடையாது. ஆனால் இந்த இளைஞர்கள் என்னை அருகில் அழைத்து தொட்டு பேசினார்கள். பின்னர் என்னுடைய ஆடைகளை களைய முயன்றார்கள். அப்போது எனக்கு வயது 6. என்னால் சூழல் சரியில்லை என்பதை புரிந்துக்கொள்ள முடிந்தது. எனவே நான் எனது பெற்றோரிடம் இது குறித்து விரிவாக கூறினேன். அவர்கள் இதிலிருந்து என்னை மீட்டெடுத்தார்கள்.

விழிப்புணர்வு
குழந்தை வயது என்பது பட்டாம்பூச்சி போன்றது. சிறகடித்து பறக்க வேண்டிய வயதில் இபோன்ற சம்பவங்களால் குழந்தைகளின் மனதில் இருள் சூழந்துவிடுகிறது. எனவே அவர்களுக்கு நல்ல தொடுதல் எது? கெட்ட தொடுதல் எது? என்பது குறித்து தெளிவாக விளக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இதனை பெற்றோர்கள்தான் கற்றுத்தர வேண்டும்" என்று கூறியுள்ளார். பிரபலங்கள் தாங்கள் சிறு வயதில் எதிர்கொண்ட வன்கொடுமைகள் குறித்து வெளிப்படையாக கூறி வருவது பொதுச் சமூகத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது" என்பது குறிப்பிடத்தக்கது.
-
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டவரை.. ரூ.34 கோடி 'ரத்த பணம்' செலுத்தி மீட்ட கேரள மக்கள் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications