Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கூரை மீது ஏறிய நமீதா.. உடனே கிடைத்தது சூப்பர் கனெக்ஷன்.. காரணத்தை கேட்டால் அசந்துடுவீங்க!

சிக்னல் இல்லாததால் கூரை மீது ஏறி உட்கார்ந்து படித்த மாணவிக்கு பாராட்டு குவிகிறது

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: "சிக்னல் கிடைக்கலை.. ஆன்லைன்ல கிளாஸ் நடத்தறாங்க.. என்ன செய்யறதுன்னே தெரியல்லை.. அதான் இப்படி" என்று நமீதா சொல்வதில் நியாயம் இருப்பதாகவே அனைவருக்கும் தோன்றியது.

தொற்று காரணமாக லாக்டவுன் 5.0 நடந்து கொண்டிருக்கிறது.. ஆனாலும் சில தளர்வுகளும் செய்யப்பட்டு உள்ளன.. என்ன தளர்வுகள் இருந்தாலும் பள்ளி, கல்லூரிகளை திறக்கப் போவதில்லை என்பதில் மட்டும் எல்லா மாநில அரசுகளும் உறுதியாக உள்ளன.

 kerala college student climbed rooftop to attend online classes, viral video

அதற்கு பதிலாக ஆன்லைன் கிளாஸ்கள் சில மாநிலங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதில் கேரளாவும் ஒன்று.. 1-ம்கிளாஸ் முதல் காலேஜ் வரை உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஒரு மாணவிதான் நமீதா.

மலப்புரம் மாவட்டத்தில் கூத்தக்கல் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி.. இவருக்கும் ஆன்லைன் கிளாஸ் நடந்துள்ளது.. ஆனால் அவருடைய மொபைலில் சிக்னல் இல்லை.. ஆன்டிராய்டு மொபைலில் சிக்னல் கிடைக்காமல் நமீதாவால் பாடத்தையும் கவனிக்க முடியவில்லை... அதனால் என்ன செய்வதென்றே தெரியாமல், அதே நேரத்தில் கிளாஸையும் தவற விட்டுவிடக்கூடாது என்பதற்காக, வீட்டின் கூரை மீது ஏறி உட்கார்ந்து கொண்டார்.

அங்குதான் அவரது செல்போனுக்கு சிக்னல் கிடைத்துள்ளது.. கூரை மீதிருந்தே ஆன்லைன் கிளாஸை கவனித்தார். நமீதா கூரை மீது உட்கார்ந்து படிப்பதை அவரது சகோதரி பார்த்துவிட்டு யதேச்சையாக வீடியோ எடுத்து, அதை வாட்ஸ்அப்பிலும் பதிவிட்டார்.. அந்த வீடியோ படு வைரலாகிவிட்டது.. நமீதாவுக்கு பாராட்டு குவிந்தபடியே உள்ளது.. "இவரல்லவா மாணவி" என்று சோஷியல் மீடியாவில் புகழ்ந்து தள்ளினர்.

அதே நேரத்தில் இந்த வீடியோ அரசின் பார்வைக்கும் சென்றது, அதிகாரிகளின் கவனத்துக்கும் சென்றது.. இது தொடர்பாக கோட்டக்கல் எம்எல்ஏ சையத் அபித் ஹூசேன் தாங்கல், முகமது பஷீர் எம்பி உட்பட பலரும் நமீதாவுக்கு பாராட்டு தெரிவித்தனர்.. தனியார் இன்டர்நெட் சேவை நிறுவனம் ஒன்று நமீதாவின் வீட்டிற்கு சென்று அவருக்கு அதிவேக இன்டர்நெட் சேவையை வீட்டிற்குள்ளேயே கிடைக்கும் படி உதவி செய்து கொடுத்தது... ஆனால் தன்னை போலவே பல மாணவ, மாணவிகள் இன்டர்நெட் சேவை சரிவர கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாக நமீதா அவர்களிடம் கூறினார்.

நமீதா சொன்னது மிக சரியே.. பல மாநிலங்களில் மாணவர்கள் இப்படி நடைமுறை சிக்கலை சந்தித்து வருகின்றனர். எத்தனையோ கிராமப்புறங்களில், தங்கள் பிள்ளைகளாவது நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் கஷ்டப்பட்டு ஏழைகள் படிக்க வைத்து வருகின்றனர்.. இவர்களுக்கு ஃபீஸ் கட்டுவதே பெரிய சிரமமாக இருக்கும் நிலையில், எல்லார் வீடுகளிலும் ஸ்மார்ட் போன் இருக்குமா? படிக்கிற பிள்ளைகள் கையில் அவைகளை வாங்கி தர பெற்றோரால் முடியுமா என்பது கேள்விக்குறிதான்.

ஸ்மார்ட் போன் இருந்தால்தான் ஆன்லைன் கிளாஸில் பங்கெடுக்க முடியும்.. அப்படி இருக்கும்போது, ஸ்மார்ட் போன் இல்லாதவர்களுக்கு இந்த கிளாஸ்களில் பலனும் இருக்காது.. அப்படியே ஸ்மார்ட் போன் இருந்தாலும் நமீதா போல சிக்னல் பிரச்சனைகளும் வந்துவிடுகிறது.. அதுமட்டுமில்லை, ஸ்மார்ட் போன் இல்லாத பிள்ளைகளுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டுவிடுகிறது.

சின்ன வயசு பிள்ளைகளால் மற்ற சக நண்பர்களிடம் அவமானமடைவதாக கருதி கொள்கின்றனர்.. அதனால், இந்த ஆன்லைன் கிளாஸ் உட்பட மத்திய, மாநில அரசுகள் மாணவர்களின் நலனில் கூடுதல் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+