"இந்தியா" கூட்டணிக்கு 'சொந்த செலவில் சூனியம்'? கேரளா சிபிஎம் அரசுக்கு எதிராக காங்கிரஸ் காட்டம்!
திருவனந்தபுரம்: "இந்தியா" கூட்டணியில் சிபிஎம் இடம்பெற்றுள்ள நிலையில் அக்கட்சியின் கேரளா அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி காட்டமான விமர்சனங்களை முன்வைத்திருப்பது புதிய புகைச்சலை கிளப்பியுள்ளது.
லோக்சபா தேர்தலை எதிர்கொள்வதற்காக எதிர்க்கட்சிகள் இணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்தக் கூட்டணியில் காங்கிரஸ், சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரிகளும் இடம்பெற்றுள்ளன.

ஆனால் கேரளா மாநிலத்தில் ஆளும் சிபிஎம் அரசுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளா சிபிஎம் அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை காங்கிரஸ் முன்வைத்துள்ளது. "இந்தியா" கூட்டணியின் 3-வது கூட்டம் மும்பையில் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸின் இந்த விமர்சனம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா முதல்வர் பினராயி விஜயன் மகள் வீணா விஜயன், தனியார் நிறுவனத்திடம் இருந்து மாதம் ரூ1.72 கோடி பணம் வாங்கியதாக ஒரு சர்ச்சை கேரளா அரசியலில் பெரும் புயலாக வீசிக் கொண்டிருக்கிறது. இப்போது இந்த பிரச்சனையை கேரளா காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது.
இது தொடர்பாக கேரளா எதிர்க்கட்சித் தலைவரான மூத்த காங்கிரஸ் தலைவர் விடி சதீஷன் கூறுகையில், வீணா விஜயன் மீதான புகார் உள்ளிட்டவைகள் குறித்து முதல்வர் பினராயி விஜயன் இதுவரை ஒரு வார்த்தை கூட பதில் பேசாமல் இருக்கிறார். பிரதமர் மோடியைப் போல மவுனம் காத்து வருகிறார் பினராயி விஜயன். முன்னராவது ஏதாவது ஒரு கருத்தை தெரிவித்து வருவார் பினராயி விஜயன். ஆனால் தற்போது வீணா விஜயன் விவகாரம் உள்ளிட்டவைகளில் பினராயி விஜயன் கனத்த மவுனம் காத்து வருகிறார். ஆகையால் பினராயி விஜயன் ஊடகங்களிடம் இது குறித்து பேச வேண்டும். உரிய விளக்கம் தர வேண்டும் என போர்க்கொடி தூக்கி இருக்கிறார்.
மேலும் கேரளா வயநாடு தொகுதியிலேயே ராகுல் காந்தி மீண்டும் போட்டியிட வேண்டும் என்பது எங்களது விருப்பம். இதனை ராகுல் காந்தியிடம் தெரிவிப்போம் என்றார் சதீஷன்.
-
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
கேரள லாட்டரியில் ரூ.1 கோடி + 25 லட்சம்.. எர்ணாகுளத்திற்கு அடுத்தடுத்து பரிசு மழை! வின்னர் யார்? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications