கையளவு மிளகுக்காக அண்ணன் குத்திக் கொலை.. "கொடூர" தம்பிக்கு ஆயுள் தண்டனை.. கேரளாவில் ஷாக் சம்பவம்
திருவனந்தபுரம்: தான் நட்டு வளர்த்த செடியில் இருந்து மிளகு பறித்ததற்காக தன் அண்ணனை கத்தியால் கொடூரமாக குத்திக் கொலை செய்த தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து காசர்கோடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபகாலமாக நம் சமூகத்தில் குடும்பப் பிணைப்பு குறைந்துக் கொண்டே வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. உறவுகளை விட பணம்தான் முக்கியம் என்ற சுயநல எண்ணம் தலைதூக்க தொடங்கிவிட்டது. ஒருகாலத்தில், குடும்பத்தில் யாருக்கு இடையிலாவது ஏதேனும் தகராறு ஏற்பட்டால் பெரியவர்கள் பேசி சமரசம் செய்து வைப்பது வழக்கம்.
ஆனால், இப்போது யார் பேச்சையும் கேட்க யாரும் தயாராக இல்லை. சிறிய பிரச்சினை என்றாலும் கூட கொலை வரை சென்றுவிடுவது இன்று சர்வசாதாரணமாகி விட்டது. அந்த வகையில், கேரளாவில் அண்ணன் தம்பிக்கு இடையே மிக அற்பமான விஷயத்துக்காக ஏற்பட்ட தகராறு கொலையில் சென்று முடிந்திருக்கிறது.

சொத்தை பிரித்து கேட்டு தகராறு
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள அதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவப்ப நாயக். இவருக்கு புத்தா நாயக் (38) மற்றும் பிஜு (35) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் புத்தா நாயக்குக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார். ஆனால், பிஜுவுக்கு திருமணம் ஆகவில்லை. இதனிடையே, கடந்த 2013-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் தேவப்ப நாயக் இறந்துவிட்டார். தந்தை இறந்ததால் வீட்டை பாகப்பிரிவினை செய்து தனது பங்கை கொடுக்க வேண்டும் என பிஜு கேட்க தொடங்கினார். ஆனால், அண்ணன் புத்தா நாயக் இதை விரும்பவில்லை. இதனால் அண்ணன் - தம்பிக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

மிளகு பறித்ததால் ஆத்திரம்
இதனிடையே, கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி, அண்ணன் புத்தாநாயக், வீட்டு சமையலுக்காக தோட்டத்தில் இருந்த செடியில் இருந்து மிளகுகளை பறித்துள்ளார். இந்நிலையில், இரவு மது அருந்திவிட்டு வந்த பிஜு, செடியில் இருந்து மிளகுகள் பறிக்கப்பட்டதை பார்த்து ஆத்திரம் அடைந்தார். "நான் நட்டு வைத்து வளர்க்கும் செடியில் இருந்து நீ எப்படி மிளகு பறிக்கலாம்" எனக் கூறி அண்ணன் புத்தா நாயக்கிடம் பிஜு தகராறில் ஈடுபட்டார். அப்போது இருவரையும் சமாதானப்படுத்த முயன்ற புத்தா நாயக்கின் மனைவி சீதாவை பிஜு தள்ளிவிட்டுள்ளார்.

கொடூரக் கொலை
இதனால் ஆத்திரமடைந்த புத்தா நாயக், தம்பி பிஜுவை அடித்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து புத்தா நாயக்கின் மகன் ராஜேஷின் கழுத்தில் வைத்த பிஜு, அவனை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். அப்போது மகனை காப்பாற்ற புத்தா நாயக் அருகே சென்ற போது, பிஜு தான் வைத்திருந்த கத்தியால் புத்தா நாயக்கின் கழுத்து, நெஞ்சு ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே புத்தா நாயக் உயிரிழந்தார்.

ஆயுள் தண்டனை
இதுகுறித்து புத்தா நாயக் மனைவி சீதா அளித்த புகாரின் பேரில், போலீஸார் பிஜுவை கைது செய்தனர். இந்த வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக காசர்கோடு செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிஜுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், அவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications