கேரளாவில் அதிகரித்த வாக்குப்பதிவு.. ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறியா? பெரிய ட்விஸ்ட் இங்கே தான் இருக்கு
திருவனந்தபுரம்: கேரளா சட்டசபை தேர்தலில் கடந்த முறை பதிவானதை விட இந்த முறை அதிகளவில் ஓட்டுகள் பதிவாகி வருகிறது. பொதுவாகவே முந்தைய தேர்தலைவிட அதிக வாக்குகள் பதிவாகும்போது ஆட்சி மாற்றம் நடக்கும் என்பதால் இந்த முறை கேரளாவில் கம்யூனிஸ்ட் கூட்டணியை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
கேரளாவில் இன்று ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைய உள்ளது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்து செல்கின்றனர்.

கேரளாவில் மொத்தம் 140 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மெஜாரிட்டிக்கு மொத்தம் 71 இடங்களில் வெற்றி பெற வேண்டும். தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக பினராயி விஜயன் உள்ளார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக முதல்வராக உள்ளார். இந்த முறை இந்த கூட்டணி வென்றால் ஹாட்ரிக் வெற்றியாகும். இதனால் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய இடதுசாரி கூட்டணி முனைப்பு காட்டி வருகிறது.
மும்முனை போட்டி
அதேவேளயைில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி எப்படியாவது ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதனால் அந்த நம்பிக்கையில் காங்கிரஸ் சட்டசபை தேர்தலை எதிர்கொண்டுள்ளது. இதுதவிர பாஜக தலைமையிலான கூட்டணியும் தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் களமிறங்கி உள்ளது.
அதிகரிக்கும் வாக்குப்பதிவு
இந்நிலையில் தான் மதியம் 3 மணியளவில் கேரளாவில் 62.71 சதவீதம் வரை ஓட்டுகள் பதிவாகி உள்ளது. இதற்கிடையே தான் கடந்த 2021 சட்டசபை தேர்தலைவிட இந்த முறை அதிகமான வாக்குகள் பதிவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கேரளா தலைமை தேர்தல் அதிகாரியும் உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர்,
கேரளாவில் வாக்குப்பதிவு 90 சதவீதத்தை தாண்ட வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.
வாக்கு அதிகரித்தால் ஆட்சி மாற்றம்
பொதுவாக முந்தைய சட்டசபை தேர்தலை ஒப்பிடும்போது அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு அதிகரிப்பது என்பது ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. கடந்த 2011 சட்டசபை தேர்தலில் கேரளாவில் 75.26 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இது 2006 தேர்தலை ஒப்பிடும்போது 3.18 சதவீதம் அதிகமாகும். இதனால் ஆட்சியில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை இழந்தது. காங்கிரஸ் அரியணை ஏறியது.
அதன்பிறகு 2016 சட்டசபை தேர்தலில் கேரளாவில் 77.53 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. இது 2011 சட்டசபை தேர்தலை ஒப்பிஇடும்போது 2.27 சதவீத ஓட்டுகள் அதிகமாகும். இதனால் ஆட்சி மாற்றம் நடந்தது. காங்கிரஸ் கூட்டணி தோல்வியடைந்து மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை பிடித்தது. பினராயி விஜயன் முதல் முறையாக முதல்வரானார்.
இதையடுத்து 2021 சட்டசபை தேர்தலில் கேரளாவில் ஓட்டு சதவீத குறைந்தது. 76 சதவீதம் மட்டுமே பதிவானது. இது 2016 சட்டசபை தேர்தலை ஒப்பிடும்போது 1.53 சதவீதம் குறைவாகும். இது ஆளும் கட்சிக்கு சாதகமாக பார்க்கப்பட்டது. அதன்படியே தேர்தல் முடிவில் காங்கிரஸ் கூட்டணி மீண்டும் தோற்றது. மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கட்சி ஆட்சியை பிடித்தது. பினராயி விஜயன் 2வது முறையாக முதல்வரானார்.
மீண்டும் ஆட்சி மாற்றமா?
அந்த வகையில் இன்று நடக்கும் சட்டசபை தேர்தலிலும் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பதிவான 76 சதவீதத்தை விட அதிகமான வாக்குகள் பதிவாக வாய்ப்புள்ளது. இதனால் பலரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணி தோல்வியை தழுவும். காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறி வருகின்றனர். ஆனால் இங்கே தான் ஒரு ட்விஸ்ட் உள்ளது.
SIR எபெக்ட் காரணமாக இருக்கலாம்
அதாவது இந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடந்தது. இதன்மூலம் இரட்டை வாக்காளர்கள், போலி வாக்காளர்கள், இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் வாக்காளர்களின் எண்ணிக்கை முந்தைய தேர்தலை விட குறைந்துள்ளது.
இப்படியாக
வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை குறையும்போது வாக்குப்பதிவு சதவீதம் தானாகவே உயரும். ஆகவே, அதிக வாக்குப்பதிவு கேரளாவில் பதிவாகி இருந்தாலும் கூட அது ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை என்பதை கூறிவிட முடியாது. மாறாக இது SIR எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் 'எபெக்ட்' என்று தான் கூற வேண்டும்.
பீகாரில் மாறிய டிரெண்ட்
ஏனென்றால் இதற்கும் கூட உதாரணம் உள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் பீகாரில் சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது மொத்தம் 67.25 சதவீதம் என்று ஓட்டுகள் பதிவாகி இருந்தது. இது கடந்த 2020ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான 57.29 சதவீதத்தை ஒப்பிடும்போது 9.96 சதவீதம் அதிகமாகும். இதனால் ஆட்சியில் இருந்த நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம்- பாஜக கூட்டணி ஆட்சியை இழந்து இருக்க வேண்டும்.
ஆனால் பீகாரில் ஆட்சி மாற்றம் நடக்கவில்லை. தொடர்ந்து கூட்டணி மாறி வந்த நிதிஷ் குமார் தலைமயைில் ஐக்கிய ஜனதாதளம் - பாஜக கூட்டணி தான் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இன்னும் சொல்லப்போனால் கடந்த 2020 சட்டசபை தேர்தலை விட இந்த கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
மே 4 வரை காத்திருப்பது அவசியம்
இதனால் கேரளாவில் தற்போது ஓட்டு சதவீதம் அதிகரித்து இருப்பது ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை என்பது பொதுவாக கூறி விடமுடியாது. எனவே 10 ஆண்டு காலம் கேரளாவில் ஆட்சி செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை தக்க வைக்கிறதா? இல்லாவிட்டால் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கிறதா? என்பதை அறிய நாம் ரிசல்ட் தேதியான மே 4ம் தேதி வரை காத்திருக்க வேண்டியது அவசியமாகும்.
-
கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா.. தமிழ்நாட்டுக்குள் ஜாலியாக உலா வரும் வாகனங்கள்! கலக்கத்தில் கன்னியாகுமரி -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications