காங்கிரஸை தொட முடியாது.. கேரளாவில் மா.கம்யூ காலி.. பாஜக கதை முடியுது - Axis My India Exit Poll
திருவனந்தபுரம்: கேரளா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும். காங்கிரஸ் கட்சியை இந்த முறை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணியால் வீழ்த்த முடியாது என்று 'ஆக்சிஸ் மை இந்தியா' எக்ஸிட் போல் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
கேரளாவில் மொத்தம் 140 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் மெஜாரிட்டிக்கு மொத்தம் 71 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் தான் கடந்த 9 ம் தேதி ஒரே கட்டமாக கேரளாவில் உள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. தபால் வாக்குகள் உள்பட மொத்தம் 79.83 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

தமிழகத்தை போல் மே 4ம் தேதி கேரளா சட்டசபை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அன்றைய தினம் கேரளாவில் யார் ஆட்சியை பிடிப்பார்கள்? என்பது தெரிந்துவிடும். இதற்கிடையே தான் இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் (எக்ஸிட் போல் முடிவுகள்) மாலை 6.30 மணி முதல் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.
கேரளாவை எடுத்து கொண்டால் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி இடையே மும்முனை போட்டி உள்ளது. இதில் கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி UDF எனவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி LDF என்றும் அழைக்கப்படுகிறது.
இந்நிலையில் தான் 'ஆக்சிஸ் மை இந்தியா' (Axis My India) கருத்து கணிப்பின்படி காங்கிரஸ் கூட்டணி 78 முதல் 90 தொகுதிகளில் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மெஜாரிட்டிக்கு 71 இடங்கள் தேவை. இதனால் காங்கிரஸ் கட்சி கேரளாவில் அசத்தலான முறையில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவை எடுத்து கொண்டால் கடந்த 2016, 2021 சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. இதன்மூலம் 10 ஆண்டுகள் கழித்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை பறிகொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கட்சிகளின் கூட்டணி 49 தொகுதிகள் முதல் 62 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் பாஜகவின் என்டிஏ கூட்டணி 0 முதல் 3 தொகுதிகளில் வெல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி கேரளாவில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால் இந்த முறை கேரளாவில் 0-3 தொகுதிகள் வரை வெற்றி பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. இது பாஜகவுக்கு ஓரளவு ஆறுதலாக இருந்தாலும் கூட அந்த கட்சி மேலிடம் நினைத்த அளவுக்கு மக்களிடம் ஆதரவு கிடைக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications