முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதி.. அனைவரும் பிரார்த்திக்க மகன் வேண்டுகோள்!
திருவனந்தபுரம் : கேரள முன்னாள் முதலமைச்சரும் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நிமோனியா காய்ச்சல் காரணமாக அவர் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இந்த தகவலை உம்மன் சாண்டியின் மகன் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தனது தந்தையின் உடல் நலம் தேற அனைவரும் பிரார்த்தனை செய்யும்படி வேண்டுகோள் விடுத்து அவர் பதிவிட்டு உள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் இருந்த உம்மன் சாண்டி ஜெர்மனி சென்று தொண்டையில் ஏற்பட்ட நோய்க்காக லேசர் அறுவை சிகிச்சை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில், நிமோனியா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் கேரளாவின் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி.












Click it and Unblock the Notifications