இட்லி, ஊத்தப்பம், பன்னீர் டிக்கா.. ஒரு மணி நேரத்தில் 33 வகை.. 10 வயது சிறுமியின் அசத்தல் சாதனை
திருவனந்தபுரம் : கேரளாவில் ஒரு மணி நேரத்தில் 33 வகையான உணவுகளைச் சமைத்து, சாதனை படைத்துள்ளார் 10 வயதான சிறுமி ஒருவர்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் பிரஜித். இந்திய விமானப் படையில் விங் கமாண்டராக பணி புரிந்து வரும் அவரது 10 வயது மகள் சான்வி பிரஜித். சிறு வயதில் இருந்தே சான்விக்கு சமையலில் ஆர்வம் அதிகமாம்.
சான்வியின் இந்த சமையல் ஆர்வத்திற்கு முக்கியக் காரணம் அவரது தாய் மஞ்சிமா. அவர் ஒரு சமையல் வல்லுநர். தான் கலந்து கொள்ளும் சமையல் நிகழ்ச்சிகளுக்கு மகள் சான்வியையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். இதனால் மஞ்சிமாவைப் போலவே தானும் ஒரு சமையல் கலைஞராக மாற வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார் சான்வி.
கூடவே அப்பா விமானப் படையில் இருந்ததால் அங்கு நடக்கும் பார்ட்டிகளில் பரிமாறப்படும் விதவிதமான உணவுகளைப் பார்த்து, அவற்றையும் தான் செய்து பார்க்க வேண்டும் என நினைத்துள்ளார்.

முதல் போட்டி
குழந்தையாக இருக்கும்போதே சமையல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அடை பாயாசம் செய்து அசத்தியுள்ளார் சான்வி. அதன் சுவையை அனைவரும் பாராட்டினாலும், அடுப்பை பயன்படுத்த முடியாத அளவிற்கு சிறுமி என்ற காரணத்திற்காக அவரால் அடுத்த கட்ட போட்டிக்கு செல்ல முடியவில்லை.
யூடியூப் சேனல்
ஆனாலும் சான்வியின் சமையல் ஆர்வத்தை ஊக்குவிக்க நினைத்த அவரது பெற்றோர், அவளுக்கென தனியாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துக் கொடுத்துள்ளனர். அதில் தனக்குப் பிடித்தமான உணவுகளைச் சமைத்து வீடியோவாக வெளியிட ஆரம்பித்துள்ளார் சான்வி.

உதவிய ஊரடங்கு
ஊரடங்கு காலத்தில் பள்ளிகளுக்கும் விடுமுறை என்பதால் கிடைத்த நேரத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். விதவிதமாக சமையல் செய்யக் கற்றுக் கொண்டார். தான் கற்றுக் கொண்ட பலகாரங்களை வைத்து சாதனை செய்ய திட்டமிட்டுள்ளார் சான்வி.

சமையலில் சாதனை
அதன்படி, இட்லி, ஊத்தப்பம், காளான் டிக்கா, பன்னீர் டிக்கா, சிக்கன் ரோஸ்ட், அப்பம், சாண்ட்விச், ஃப்ரைட் ரைஸ் என 33 வகையான உணவுகளை ஒரே மணி நேரத்தில் சமைத்து, சான்வி சாதனை படைத்துள்ளார். இந்தச் சாதனை ஆசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications