தொடரும் அட்டகாசம்.. சாலையில் பைக் சாகசம் செய்த இளைஞர்.. கல்லூரி மாணவி கவலைக்கிடம்.. தூக்கிய போலீஸ்
திருவனந்தபுரம்: சாலையில் இளைஞர் பைக் சாகசம் செய்த போது அங்கு வந்து கொண்டிருந்த கல்லூரி மாணவி மீது மோதியதில் அவர் படுகாயமடைந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே அந்த இளைஞர் பல முறை சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டதற்காக அபராதம் செலுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.
சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபடுவதால் அப்பாவி மக்கள் காயமடைவதும், உயிரிழப்பதும் தொடர்ந்து வரும் நிலையில், இச்சம்பவம் கேரள மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருந்தாத ஜென்மங்கள்
இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் பைக் சாகசம் செய்யும் ஆபத்தான பழக்கம் அதிகரித்துள்ளது. சமூக வலைதளங்களில் புகழ் பெறுவதற்காகவும், ஒன்றுக்கும் உதவாத லைக்ஸ்களை வாங்குவதற்காகவும் இதுபோன்ற சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்கள் பலர் தனது வாழ்க்கையையே இழந்து வருகின்றனர். இதில் கொடுமை என்னவென்றால், அவர்களுக்கு மட்டும் ஆபத்து ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் சாலையில் ஒழுங்காக செல்லும் அப்பாவி மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடுகிறது. அதுபோன்ற ஒரு சம்பவம்தான் கேரளாவில் நடந்துள்ளது.

பல முறை அபராதம்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கல்லம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் நெளஃபல் (24). பட்டப்படிப்பு முடித்துள்ள இவர், வேலைக்கு ஏதும் செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வந்துள்ளார். மேலும், அவ்வப்போது சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபடுவதும், அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். மேலும், இவ்வாறு பைக் சாகசத்தில் ஈடுபட்டதற்காகவும், சாலை விதிகளை மீறியதற்காகவும் 10-க்கும் மேற்பட்ட முறை நீதிமன்றங்களில் நெளஃபல் அபராதமும் செலுத்தியுள்ளார்.

கெத்து காட்டுவதற்காக..
அந்த வகையில், கடந்த வாரம் தான் ரூ.20 ஆயிரம் செலுத்தி தனது பைக்கை காவல் நிலையத்தில் இருந்து நெளஃபல் எனினும் அவர் திருந்துவதாக இல்லை. தொடர்ந்து, மக்கள் கூடும் பகுதியில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று தனது ரேஸ் பைக்கில் பள்ளி, கல்லூரி மாணவிகள் வரும் போது அவர்கள் முன்பு கெத்து காட்டுவதற்காக அவர் பைக் சாகசத்தில் ஈடுபட்டார்.

மாணவி படுகாயம்
அப்போது அவரது பைக் திடீரென நிலைத்தடுமாறி, எதிரே நடந்து வந்து கொண்டிருந்த ஒரு கல்லூரி மாணவி மீது வேகமாக மோதியது. இதில் கீழே விழுந்த அந்த மாணவிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்து பயந்து போன நெளஃபல் அங்கிருந்து ஓடிவிட்டார். தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்களும், மற்ற மாணவிகளும் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், நெளஃபலை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications