இரக்கமே இல்லையா! வயநாட்டு மக்களின் நிவாரணத்தொகையில் கை வைத்த வங்கிகள்.. இஎம்ஐ பிடித்ததால் கொதிப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரண தொகையில் இருந்து இ.எம்.ஐ தொகையை வங்கிகள் பிடித்ததும் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள வங்கியின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. பல்வேறு கட்சிகளும் போராட்டத்தில் குதித்துள்ளன. கேரள முதல்வர் பினராயி விஜயனும் வங்கியின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளா கடந்த மாத இறுதியில் பெரும் துயரத்தை எதிர்கொண்டது. கேராளாவின் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் கடந்த மாதம் 30 ஆம் தேதி அதிகாலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு பெய்த கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டக்கை கிராமம் முழுவதுமாக அழிந்த நிலையில் சூரல்மலை கிராமம் கடும் பாதிப்பை சந்தித்தது.

வீடுகள் அடித்து செல்லப்பட்டன. வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் சிக்கிக் கொண்டனர். இதில் 400-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள நிலையில் 100-க்கும் அதிகமானவர்களின் நிலை என்ன என்று தெரியாத நிலை உள்ளது. மேலும் நிலச்சரிவில் சிக்கிய ஏராளமானவர்கள் மீட்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக மீட்பு பணிகள் நடைபெற்றது. முப்படைகளும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டது.
பிரதமர் மோடி நேரடியாக சென்று நிலச்சரிவு பாதிப்பை ஆய்வு செய்தார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாக ரூ.10 ஆயிரத்தை கேரள அரசு அறிவித்தது. பாதிக்கப்பட்ட மக்களின் வங்கி கணக்கிற்கு இந்த தொகை நேரடியாக வரவு வைக்கப்பட்டது. சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு இந்த தொகை அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 10 ஆயிரம் நிவாரண தொகையில் இஎம் ஐ தொகையை பிடித்தம் செய்ததாக வங்கிகள் மீது குற்றச்சட்டு எழுந்துள்ளது. கேரளா கிராமிய வங்கிதான் இப்படி பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்கனவே பெற்று இருந்த கடன் தொகைக்கான இ.எம்.ஐ யாக ரூ. 2 ஆயிரம் பிடித்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கேரள வங்கியின் இந்த செயலைக் கண்டித்து பல்வேறு கட்சிகளை சேர்ந்த இளைஞர் அமைப்புகளும் போரட்டத்தில் ஈடுபட்டன.
பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து இ.எம்.ஐ தொகை பிடிக்க கூடாது என்றும் பிடிக்கப்பட்ட கடன் தவணை தொகையை மீண்டும் திருப்பி அளிக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக மாணவர் அமைப்பை சேர்ந்த இளைஞர் கூறுகையில், "வங்கியின் செயல் மனித தன்மையற்றது. வங்கி அதிகாரிகள் மன்னிப்பு கேட்காவிட்டால் நாங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்" என்றார்.
இதற்கிடையே பிடிக்கப்பட்ட கடன் தவணை தொகையை திருப்பி அளிக்க வேண்டும் என்று வயநாடு மாவட்ட ஆட்சியர் வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே, மாநில அளவிலான வங்கிகள் கூட்டமைப்பில் பங்க்கேற்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் வங்கியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை முழுவதும் தள்ளுபடி செய்வதே சரியாக இருக்கும் எனவும் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications