'காதலனுக்கு பாயசம்' போட்ட காதலி கிரீஷ்மாவை ஞாபகம் இருக்கா... உச்ச நீதிமன்றத்தில் போட்ட பரபரப்பு மனு
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கொலை வழக்கை தமிழகத்தின் கன்னியாகுமரிக்கு மாற்றக்கோரி, அந்த மாணவனின் காதலி கிரீஷ்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கேரள மாநிலம் பாரசாலை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஷாரோன், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்ததார். இவர் அதே கல்லூரியில் படித்த கிரீஷ்மாவை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்த நிலையில், கிரீஷ்மாவுக்கு அவரது பெற்றோர் தங்களுக்கு பிடித்த இடத்தில் வேறு மாப்பிள்ளை பார்த்தார்கள். இதனால் கிரீஷ்மா ஷாரோனை விட்டு விலக முடிவு செய்திருக்கிறார்.
இதன்படி கிரீஷ்மா, தனது காதலன் ஷரோனை விட்டுவிலக பலமுயற்சிகள் செய்திருக்கிறார். ஆனால் ஷரோன் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து கிரீஷ்மா கசாயத்தில் விஷம் கலந்து ஷாரோனை கொலை செய்தார் என்று குற்றம்சாட்டப்படுகிறது.

இதுதொடர்பாக ஷாரோனின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கிரீஷ்மா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கேரளாவை உலுக்கிய இந்த வழக்கு, அம்மாநிலத்தில் நெய்யாற்றின்கரை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பல மாதங்களாக சிறையில் இருந்த கிரீஷ்மா அண்மையில் ஜாமீன் கேட்டு கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் கடந்த 25-ம் தேதி கிரீஷ்மாவிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இந்தநிலையில், கிரீஷ்மா சார்பில் அவரது வழக்கறிஞர் ஸ்ரீராம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், நெய்யாற்றின்கரையில் நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணையை தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மாற்ற வேண்டும். என்று வலியுறுத்தி உள்ளார். இந்த வழக்கை கேரளாவில் நடத்துவது என்பது உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானது என கூறினார்.

முன்னதாக சம்பவம் தமிழக எல்லையில் நடந்த நிலையில், கேரளாவில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக அப்போது விவாதம் எழுந்த நிலையில் சட்ட நிபுணர்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டது. சட்ட நிபுணர்களின்அறிவுறுத்தலின் பேரில் இந்த வழக்கு கேரளாவில் நடந்து வருகிறது.இந்நிலையில் தான் தமிழகத்திற்கு மாற்ற வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
கேரள லாட்டரியில் ரூ.1 கோடி + 25 லட்சம்.. எர்ணாகுளத்திற்கு அடுத்தடுத்து பரிசு மழை! வின்னர் யார்? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications