மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா.. பதைபதைப்பில் கடவுளின் தேசம்.. 182 பேர் பாதிப்பு, 2 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: 2019 ஆம் ஆண்டு முதல் சுமார் 3 ஆண்டுகளுக்கு கொரோனாவின் கோர தாண்டவத்தால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். தற்போது மீண்டும் கொரோனா பரவல் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்டை மாநிலமான கேரளத்தில் 182 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் 2019 ஆம் ஆண்டு முதல் கொரோன வைரஸ் பரவத் தொடங்கி கோர தாண்டவம் ஆடியது. லட்சக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது இந்த கொரோனா. கொரோனா, உருமாறிய கொரோனா என அடுத்தடுத்து மக்களை பீதிக்குள்ளாக்கியது. மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பவே கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகின.

Kerala Corona

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. அந்த வகையில், தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது.

கேரள மாநிலத்தில் மட்டும் கடந்த இரண்டு நாட்களில் 182 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவர் உயிரிழந்துள்ளனர்.

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 59 வயது ஆண் ஒருவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 64 வயது ஆண் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் கொரோனா பெருந்தொற்றால் 2020 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்து 141 ஆக உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று கேரள சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த இரண்டு நபர்களுமே ஏற்கனவே இதய நோய் உள்ளிட்ட சில உடல்நல பாதிப்புகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் பெரிய அளவில் கொரோனா பரவல் தீவிரமடையவில்லை என்றும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+