தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் படத்தை நீக்க வழக்கு.. மனுதாரருக்கு குட்டு வைத்த கேரள உயர் நீதிமன்றம்
திருவனந்தபுரம்: கொரோனா தடுப்புஊசி செலுத்தியவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை நீக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்த நிலையில், மனுவை தள்ளுபடி செய்த கேரள உயர் நீதிமன்றம், நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடித்ததாக கூறி மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆயிரக்கணக்கான குற்ற வழக்குகள் சிவில் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது இந்த வழக்கு நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடித்து உள்ளது எனவும் கேரள உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலையடுத்து இந்தியாவில் தடுப்பூசி பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஏராளமானோர் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வரும் நிலையில், தடுப்பூசி போடாதவர்களையும் தடுப்பூசி செலுத்தும்படி மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகிறது.இதற்காக நாடு முழுவதும் லட்சக்கணக்கான சிறம்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

தடுப்பூசி சான்றிதழில் மோடி படம்
தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஆன்லைன் மூலம் தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சான்றிதழில் தடுப்பூசி செலுத்தியவரின் பெயர், ஆதார் பிறந்தநாள் முகவரி மற்றும் தடுப்பூசி விவரங்கள் இருக்கும் கீழே க்யூஆர் கோடுடன் பிரதமர் நரேந்திர மோடியின் படமும் இடம் பெற்றிருக்கும்.

நீதிமன்றத்தில் வழக்கு
இந்த நிலையில் தடுப்பூசி சான்றிதழில் இடம் பெற்றுள்ள நான் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை நீக்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றத்தில் பீட்டர் மயலிபரம்பில் என்பவர் வழக்கு தொடர்ந்தார். மனுவில் மக்களின் வரிப்பணத்தில் இருந்தே தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில், பிரதமரின் படம் மட்டுமே இடம்பெற்றுள்ளது எனவும், மாநில அரசுகளும் தடுப்பூசி செலுத்துவதில் பங்காற்றுவதால் தடுப்பூசி சான்றிதழில் இருந்து நீக்க வேண்டுமென கூறப்பட்டிருந்தது.

விளம்பரத்திற்காக வழக்கு
இந்த வழக்கு கேரள உயர் நீதிமன்ற நீதிபதி குன்னி கிருஷ்ணன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.விசாரணையின்போது கொரோனா தடுப்பூசி சான்றுகளிலிருந்து பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை நீக்க வேண்டும் என்ற இந்த வழக்கு அரசியல் மற்றும் விளம்பர நோக்கத்திற்காக அற்பமான முறைகள் தரப்பட்டுள்ளதாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

ஒரு லட்சம் ரூபாய் அபராதம்
மேலும் பல்வேறு குற்ற வழக்குகள் சிவில் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது நீதிமன்ற நேரத்தை வீணாக்கியதற்காக பீட்டர் மயலிபரம்பில் ஆறுவாரத்திற்குள் ஒரு லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் , அவ்வாறு செலுத்தத் தவறும் பட்சத்தில் வருவாய் மீட்பு நடவடிக்கைகள் மூலம் அவரது சொத்துக்களில் இருந்து அபராதத்தை வசூலித்துக் கொள்ளலாம் என தெரிவித்தார். இந்த நாட்டின் குடிமகன் ஒருவரிடம் இருந்து இது போன்ற ஒரு மனுவை நாங்கள் எதிர்பார்க்கவில்லை எனவும் குறிப்பிட்டார்












Click it and Unblock the Notifications