கணவர் இறந்தாலும்..புகுந்த வீட்டில் இருக்கும் உரிமை விதவை பெண்ணுக்கு இருக்கு! கேரள ஐகோர்ட் தீர்ப்பு
திருவனந்தபுரம்: கணவர் இறந்துவிட்டாலும் கூட அந்த பெண்ணுக்குப் புகுந்த வீட்டில் வாழ உரிமை உண்டு என்று கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கணவர் இறந்தாலும் அந்த பெண்ணை வீட்டில் இருந்து மாமனார்- மாமியார் உட்பட யாராலும் வெளியேற்ற முடியாது என்பதையும் கேரள உயர் நீதிமன்றம் மிகத் தெளிவாகக் கூறியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த 41 வயது பெண் ஒருவர் தனது கணவர் இறந்த பிறகு, மாமியார் வீட்டில் துன்புறுத்தலில் இருந்து பாதுகாப்பு கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த 2009ஆம் ஆண்டு கணவர் இறந்த பிறகு, புகுந்த வீட்டில் இருந்து தன்னை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயல்வதாக அவர் நீதிமன்றத்தில் முறையிட்டார். இதுவே வழக்கின் அடிப்படை!

தள்ளுபடி
முதலில் இந்த வழக்கை விசாரித்த பாலக்காடு செஷன்ஸ் நீதிமன்றம் ஏற்கனவே இந்த பெண்ணுக்குப் பாதுகாப்பு வழங்கி உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து மனுதாரரின் கணவரின் உறவினர் மேல்முறையீடு செய்தனர். கேரள ஐகோர்ட் நீதிபதி எம்.பி.சினேகலதா தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்த நிலையில், செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தனர். மேலும் அந்த உறவினர்களின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது.
பின்னணி என்ன
அந்தப் பெண் தனது மனுவில், கணவர் இறந்த பிறகு, மாமியார் மற்றும் மாமனார் இணைந்து தன்னை துன்புறுத்த ஆரம்பித்ததாகவும், வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அவர் 2005ஆம் ஆண்டு குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 12ன் கீழ் நீதிமன்றத்தை அணுகினார். முதலில் விசாரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம், கணவர் இறந்ததால் அந்தப் பெண்ணுக்கும் மாமியாரும் எந்தவொரு உறவும் இல்லை எனச் சொல்லி பெண்ணுக்கு எந்தவொரு நிவாரணம் வழங்க முடியாது மறுத்துவிட்டது
செஷனஸ் நீதிமன்றம்
ஆனால், இதை எதிர்த்து அந்த பெண் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், அங்குத் தீர்ப்பு வேறுவிதமாக வந்தது. செஷன்ஸ் நீதிமன்றம் அந்த பெண்ணுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பை எதிர்த்தே கணவரின் உறவினர்கள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்தப் பெண்ணுக்குச் சொந்தமாகச் சொத்து இருப்பதாகவும், அவர் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருவதாகவும் கூறிய உறவினர்கள், இதனால் அந்த பெண் பாதிக்கப்பட்ட நபர் எனச் சொல்லி முறையிட்டனர்.
கேரள ஐகோர்ட்
இருப்பினும், இந்த வாதங்களை நிராகரித்த உயர் நீதிமன்றம், அந்தப் பெண் இறந்தவரின் மனைவி என்றும் அவர் அந்த வீட்டில் வசித்து வந்தவர் என்பதையும் குறிப்பிட்டனர். இதனால் இந்த வழக்கில் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பொருந்தும் என்று கூறினார். மேலும், அந்த வீட்டில் வசிப்பதற்கான உரிமை அந்த பெண்ணுக்கு இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது.
கடந்த 2022ஆம் ஆண்டு பிரபா தியாகி vs கமலேஷ் தேவி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டி கேரள ஐகோர்ட் இந்த தீர்ப்பை வழங்கியது. மேலும் நீதிபதிகள், "ஒரு பெண்ணின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்திற்கு இந்த உரிமை மிகவும் முக்கியமானது. குடும்ப வன்முறையினால் அவர் வலுக்கட்டாயமாக வீட்டில் இருந்து வெளியேற்றப்படாமல் இருப்பதே இந்த விதி" என்றார்.
மேலும், கணவரின் உறவினர்களின் வாதத்தில் எந்தவிதமான நியாயமும் இல்லை என்று கூறி, செஷன்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. எனவே, மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
-
நாளை பக்ரீத்.. தமிழகத்தில் பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை.. ஐகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு! -
இஸ்லாமிய மன்னர்களே பசுக்களை வெட்டியது இல்லை.. தீர்ப்பில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் சொன்னது என்ன? -
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications