அரசு பஸ்ஸை வடிவேல் போல் "இது உங்கள் சொத்து" என உரிமையா சொல்லிக்கலாம்! கேரளாவில் வினோத திட்டம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் போக்குவரத்துத் துறையில் நஷ்டத்தை போக்க ரூ 40 லட்சம் கொடுத்தால் உங்கள் பெயரில், உங்கள் புகைப்படம் வைக்கப்பட்டு அரசு பேருந்துகள் இயக்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.

கேரள மாநில போக்குவரத்து கழக வரலாற்றில் முதல் முறையாக மக்களிடம் நிதியை பெற்று அதில் பேருந்தை வாங்கி அரசின் நிதி நெருக்கடிக்கு பாலமாக அமையும் வகையில் இந்த அறிவிப்பு உள்ளது.

kerala ksrtc bus

கேரள அரசு போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்கி வருகிறதாம். அதாவது பஸ்களை இயக்காவிட்டாலே கேரள அரசுக்கு நன்மை என்ற வகையில் இருக்கிறதாம். பெண்களுக்கான இலவச பேருந்து சேவை மூலம் ஆண்டுக்கு ரூ 800 கோடி கூடுதல் செலவு ஏற்படுகிறது.

இதனால் அரசு போக்குவரத்து கழகத்தால் ஓட்டை உடைச்சல் பஸ்ஸை மாற்றிவிட்டு புதிய பேருந்துகளை வாங்கக் கூட முடியவில்லை. அதற்கான நிதி இல்லாமல் தவிக்கிறது. புதிய பேருந்து வாங்க கோழிக்கோடு நகர சர்வீஸ் கூட்டுறவு வங்கி, அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ 40 லட்சம் நன்கொடை அளித்துள்ளது.

இதனால் 100-க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் புதிய பேருந்துகளை வாங்க தங்களது பொது நிதியில் இருந்து நன்கொடை வழங்க ஒப்புதல் அளித்துள்ளன. இந்த நன்கொடை மூலம் கிடைக்கும் ரூ 800 கோடியில் 2 ஆயிரம் பேருந்துகளை வாங்க அரசு முடிவு செய்துள்ளதாம்.

இந்த புதிய பேருந்துகள் கூட்டுறவு சங்கங்களின் பெயரில் இயக்கப்படும். கூட்டுறவு சங்கங்களின் கோரிக்கையை ஏற்று கோழிக்கோட்டில் இருந்து பாலக்காடு, முதலைமடை வழியாக பரம்பிக்குளம் வரை புதிய பேருந்து சேவையை தொடங்க அரசு உத்தேசித்துள்ளது. பரம்பிக்குளம் சுற்றுலாத் துறைக்கு வருவாயை கொடுக்கும்.

மேலும் புதிய பேருந்துகளை வாங்க தனி நபர்களிடம் இருந்து நன்கொடை வசூலிக்கப்படுகிறது. அதாவது ரூ 40 லட்சம் கொடுத்தால் பணம் யார் கொடுக்கிறார்களோ அவர்களது பெயரில் அவரது புகைப்படத்துடன் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து கேரள போக்குவரத்துத் துறை அமைச்சர் சி.பி.ஜான் கூறியிருப்பதாவது: பொதுப் பணித் துறைகளை வலுப்படுத்த பொதுமக்களின் பங்களிப்புக்கு வலிமையான உதாரணமாக பேருந்துகளை வாங்க பணம் நன்கொடையாக கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கோழிகோடு நகர கூட்டுறவுச் சங்கத்திற்கு நன்றி. போக்குவரத்தை கழகத்தை காக்க பொதுமக்களின் ஒத்துழைப்புதான் பெரிய பலமாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வடிவேல் காமெடியில் வருவதை போல் பேருந்துகள் இனி "இது உங்கள் சொத்து" என தாராளமாக சொல்லலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+