Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

8 மாத திட்டம்.. உடல் எடை குறைப்பு.. ஒற்றை கை கோவிந்தசாமியால் ஆடிப்போன கேரளா சிறைத்துறை

Subscribe to Oneindia Tamil

கண்ணூர்: பாலியல் கொலை குற்றவாளி கோவிந்தசாமியால் ஒட்டு மொத்த கேரளா சிறைத்துறை அதிர்ந்து போயுள்ளது. ஓடும் ரயிலில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை வழக்கில் அவர் கண்ணூர் சிறையில் இருந்து வந்தார். அங்கிருந்து அவர் தப்பி சென்று, சிறிது நேரத்திலேயே பிடிபட்டு விட்டார். சிறையில் இருந்து தப்பிப்பது அவ்வளவு சாதாரணமல்ல. அதுவும் ஒற்றைக் கையை மட்டுமே கொண்ட மாற்றுத்திறனாளி கோவிந்தசாமி இதை எப்படி செய்தார் என சிறைத்துறையினர் குழப்பத்தில் உள்ளனர். இதற்காக அவர் 8 மாதங்கள் பயங்கரமாக திட்டமிட்டு உடல் எடையை குறைத்து பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளான்.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை பூர்விகமாக கொண்டவர் கோவிந்தசாமி. தமிழகத்திலேயே இவர் மீது பல வழக்குகள் உள்ளன. கடந்த 2011 ஆம் வருடம் அவர் கேரளா மாநிலம், திருச்சூர் ரயிலில் பெண்ணை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார். இதற்காக அவரை சொர்ணூர் காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.

kerala-jail-kerala-govindsamy-plans-for-8-months-to-escape-from-kannur-jail

இதுதொடர்பான வழக்கு விசாரணையில் கேரளா நீதிமன்றம் கோவிந்தசாமிக்கு ஆயுள் தண்டனை கொடுத்தது. இதையடுத்து அவர் கண்ணூர் சிறையில் இருந்து வருகிறார். ஒற்றை கையை மட்டுமே கொண்ட மாற்றுத்திறனாளியான கோவிந்தசாமி மிகவும் வில்லங்க பின்னணியை கொண்டவர். அதனால் தான் அவருக்கு வாழ் நாள் முழுவதும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஒருமுறை கூட பரோல் இல்லை..

இந்நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவு கோவிந்தசாமி சிறையில் இருந்து தப்பித்துவிட்டார். சிறை கம்பியை வளைத்து, சுற்றுச்சுவரில் கம்பளியை போட்டு குதித்து தப்பி சென்றார். இந்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. காவல்துறையினர் அவரை தேடி வந்த நிலையில் கண்ணூர் பகுதியில் வைத்தே கோவிந்தசாமி நேற்று கைது செய்யப்பட்டார்.

தப்பி சென்ற 7 மணி நேரத்தில், சிறையில் இருந்து சுமார் 3.5 கிமீ தொலைவில் அவர் கைது செய்யப்பட்டார். கோவிந்தசாமியிடம் சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல்கட்ட விசாரணையில் அவர், "நான் பலத்காரம் வழக்கில் தான் கைது செய்யப்பட்டேன். எனக்கு ஒருமுறை கூட பரோல் வழங்கப்படவில்லை. 15 வருடங்களுக்கு மேலாக சிறைக்குள்ளேயே அடைந்து கிடக்கிறேன். அதனால் தான் சிறையில் இருந்து தப்பினேன்." என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாற்றுத் திறனாளியான கோவிந்தசாமி யாரின் உதவி இல்லாமல் எப்படி தப்பினார் என்று சிறைத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

8 மாதங்கள் திட்டம்.. உடல் எடை குறைப்பு..

சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், "சிறை பணிகளுக்கு செல்லும்போது அங்கிருந்த இரும்புகளை எடுத்து தன் செல்லுக்குள் பதுக்கி வைத்துள்ளான். கடந்த 8 மாதங்களாக சிறையில் இருந்து தப்பிப்பது குறித்து தீவிரமாக திட்டமிட்டு வந்துள்ளான். இதற்காக நன்கு இடியுடன், மழை பெய்யும் ஒரு நாளை தேர்வு செய்து சிறை கம்பியை வளைத்துள்ளான்.

எளிதாக தப்பி செல்ல தன் உடல் எடையை குறைத்துள்ளான். உணவை எடுத்துக் கொள்வதை பாதியாக குறைத்துள்ளான். முக்கியமாக அரிசி உணவு தவிர்த்து சப்பாத்தி மட்டும் கிடைக்கும்போது சாப்பிட்டுள்ளான். அங்குள்ள சுற்றுசுவரில் மின் வேலி உள்ளது. தப்பி சென்றபோது மின்வேலி உபயோகத்தில் இல்லை. ரோந்து பணி செய்ய வேண்டிய காவலர்களும் செய்யவில்லை.

நள்ளிரவில் பலே திட்டம்..

சிறைக்குள் கட்டுமானப் பணி நடந்தபோது ஆக்சா பிளேடு எடுத்து பதுக்கியுள்ளான். சிறைக்குள் உப்பு கிடைக்கும்போது, அதன் மூலம் கேட்டை துரு பிடிக்க வைத்து பலவீனப்படுத்தியுள்ளான். நள்ளிரவு நேரங்களில் கீழ் பக்க கம்பிகளை கொஞ்சம் கொஞ்சமாக அறுத்து வைத்துள்ளான். விடுதலையாகும் கைதிகளின் போர்வையில் இருந்து கயிறு தயாரித்துள்ளான்.

7 மீ உயரம் கொண்ட உயர்ந்த தடுப்பு சுவரை தாண்டுவது தான் மிகவும் சவாலானது. ஒற்றை கை மற்றும் வாயில் கயிறை கடித்தபடி தாண்டியுள்ளான். சிறை வளாகத்தை தாண்டியவுடன் கைதிக்கான சீருடையை கழற்றிவிட்டு, விசாரணைக் கைதியிடம் இருந்த சாதாரண உடையை அணிந்துள்ளான். சிறை வளாகத்தில் உள்ள 140 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம். அவனை கூடுதல் பாதுகாப்பு அம்சம் நிறைந்த திருச்சூர் வியூர் சிறைக்கு மாற்ற திட்டமிட்டுள்ளோம்." என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+