புட்டு புட்டு வைத்த ஸ்வப்னா.. முன்னாள் முதன்மை செயலர் சிவசங்கர் கைது.. நள்ளிரவில் அமலாக்கத்துறை அதிரடி
கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் அதிரடி கைது செய்யப்பட்டுள்ளார்
திருவனந்தபுரம்: கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உதவியுடன் வடக்கஞ்சேரியில் ஏழைகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் ஒப்பந்தம் வழங்க லஞ்சம் வாங்கிய வழக்கில் சிவசங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர்.. கடந்த மாதம் தான் பணியில் இருந்து ஓய்வு பெற்றார் சிவசங்கர்.
எனினும் லைஃப் மிஷன் என்ற ஊழல் வழக்கில் தொடர்புபடுத்தி பேசப்பட்டு வந்தவர்.. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உதவியுடன் வடக்கஞ்சேரியில் ஏழைகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் ஒப்பந்தம் வழங்க லஞ்சம் வாங்கிய வழக்கில் சிவசங்கர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்வப்னா
இந்த ஒப்பந்தம் பெற ரூ.4 கோடியே 48 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக காண்ட்ராக்டர் சந்தோஷ் ஈப்பன் வாக்குமூலம் அளித்திருந்தார்.. அதேபோல, கேரள தங்க கடத்தல் வழக்கின் முக்கிய புள்ளியான ஸ்வப்னா சுரேஷுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதற்கு பிறகுதான், ஸ்வப்னா சுரேஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரூ.1 கோடி கமிஷனாக பெற்றதாக தகவல் வெளியானது.. ஆனால் இதைப்பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று தொடர்ந்து சொல்லி வந்தார் சிவசங்கர்..

வாக்குமூலங்கள்
அத்துடன், தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் கூறினார்.. இதன்காரணமாகவே, அமலாக்கத்துறை விசாரணைக்கும் ஒத்துழைக்காமல் இருந்து வந்தார்.. எனினும், சிவசங்கருக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்து கொண்டே இருந்தது. கடந்த 3 நாட்களாகவும் விசாரணை நடத்தி வந்த அமலாக்கத்துறை அவரை கைது செய்துள்ளது.. நேற்றிரவு 11.45 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டார்.. இன்றைய தினம் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.

ஒரு கோடி பணம்
இந்த கைது நடவடிக்கைக்கு அடிப்படை காரணமாக இருந்தது ஸ்வப்னா தந்த வாக்குமூலம்தான்.. முதன்முதலில், சிவசங்கரின் ஆடிட்டர், ஸ்வப்னா சுரேஷ் ஆகியோர் சேர்ந்து வங்கியில் எடுத்திருந்த லாக்கரிலிருந்து ஒரு கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டது... அதற்கு பிறகுதான், அது சிவசங்கர் ஊழல் மூலம் சம்பாதித்த பணம் என்று ஸ்வப்னா வாக்குமூலத்தில் தெரிவித்தார்.. அதாவது, லைஃப் மிஷன் ஊழல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், பிஎஸ்சரித், சந்தீப் நாயர், இந்த திட்டத்தின் ஒப்பந்ததாரர் சந்தோஷ் ஈப்பன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு, அவர்களிடமும் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது.

இன்று ஆஜர்
லைஃப் மிஷன் திட்டத்தில் 6 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்திருந்தார். அதற்கு பிறகுதான், இந்த வழக்கில் சிவசங்கர் குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டார்.. நேற்றிரவு கைதான சிவசங்கரை மருத்துவப் பரிசோதனைக்கு பின்னர் அவரை இன்று எர்ணாகுளம் பிரின்ஸ்பல் செசன்ஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கேரளாவில் ஏற்படுத்தி வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications