கேரள உள்ளாட்சித் தேர்தல்: இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை- இங்கேயும் சாதிக்குமா பாஜக?
திருவனந்தபுரம்: கேரள உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலைப் போல பாஜக, கேரளாவில் வெற்றியை பெறுமா? என நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கேரளாவில் டிசம்பர் 8-ந் தேதி முதல் 3 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு பதிவு நடைபெற்றது. 3 கட்ட வாக்குப் பதிவுகளிலும் சுமார் 76.63% பேர் வாக்களித்திருக்கின்றனர்.

இடதுசாரிகள் நிலைமை
கேரளாவில் ஆளும் இடதுமுன்னணி கடுமையான குறச்சாட்டுகளில் சிக்கி இருக்கிறது. இது நிச்சயம் தற்போதைய உள்ளாட்சித் தேர்தலில் அந்த அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

பாஜக சிறுபான்மை வேட்பாளர்கள்
இடதுமுன்னணியை வீழ்த்தும் வல்லமை கொண்டது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி. ஆனால் பாஜகவோ இந்த முறை தீவிரமான இந்துத்துவா கொள்கையை வலியுறுத்தாமல் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது. பாஜகவும் 600க்கும் மேற்பட்ட சிறுபான்மையினரை வேட்பாளராக களத்தில் நிறுத்தி இருக்கிறது.

ஹைதராபாத் சாதனை
பாஜகவின் இந்த தடாலடி வியூகம் கேரளாவில் கை கொடுக்க வாய்ப்பிருக்கிறது என்றே தெரிகிறது. யாரும் எதிர்பாராத வகையில் தெலுங்கானாவின் ஹைதராபாத் மாநகராட்சியில் மாஸ் காட்டி 2-வது இடத்துக்கு வந்தது பாஜக.

இன்று வாக்கு எண்ணிக்கை
கேரளாவிலும் நீண்டகாலமாக போராடி வரும் பாஜக இந்த தேர்தலில் எப்படியான வாக்குகளைப் பெற உள்ளது என்பது இன்றைய வாக்கு எண்ணிக்கையில் தெரிந்துவிடும். கொரோனா பரவல் காலம் என்பதால் சமூக இடைவெளியுடன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு 244 வாக்கு எண்ணிக்கை மையங்களில் தொடங்க உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications