கேரளாவில் காங்கிரஸ் 20ல் 18ஐ தட்டி தூக்கியது..மோசமாக வீழ்ந்த கம்யூனிஸ்டுகள், பாஜக அசத்தல் வெற்றி
திருவனந்தபுரம்: கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதியில் காங்கிரஸ் தலைமையிலான யூடிஎப் 18 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்துள்ளது. திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி அபார வெற்றி பெற்றுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.
படித்தவர்கள் அதிகம் உள்ள கேரளாவில் கம்யூனிஸ்டுகள் மற்றும் காங்கிரஸ் இடையே தான் போட்டியே நடக்கும். ஒன்று கம்யூனிஸ்டுகள் ஜெயிப்பார்கள்.. இல்லாவிட்டால் காங்கிரஸ் ஜெயிக்கும். இதுதான் இன்று வரை உள்ள நடைமுறையாகும். கடந்த 2019 லோக்சபா தேர்தலில், சிபிஐ(எம்) 1 இடத்திலும், காங்கிரஸ் 15 இடத்திலும், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி 1 இடத்திலும், கேரள காங்கிரஸ் (எம்) 1 இடத்திலும், ஐயுஎம்எல் 2 இடத்திலும் வெற்றி பெற்றன.

கேரளாவில் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 20.அவற்றின் விவரங்களை பார்க்கலாம். ஆலப்புழா, ஆலத்தூர், அட்டிங்கல், சாலக்குடி, எர்ணாகுளம், இடுக்கி, கண்ணூர், காசர்கோடு, கொல்லம், கோட்டயம், கோழிக்கோடு, மலப்புரம், மாவேலிக்கரா, பாலக்காடு, பத்தனம்திட்டா, பொன்னானி , திருவனந்தபுரம், திருச்சூர், வடகரா, வயநாடு.
இந்த முறை லோக்சபா தேர்தல் கேரளாவில் ஆலப்புழா, ஆலத்தூர், அட்டிங்கல், சாலக்குடி, எர்ணாகுளம், இடுக்கி, கண்ணூர், காசர்கோடு, கொல்லம், கோட்டயம், கோழிக்கோடு, மலப்புரம், மாவேலிக்கரா, பாலக்காடு, பத்தனம்திட்டா, பொன்னானி , திருவனந்தபுரம், திருச்சூர், வடகரா, வயநாடு என மொத்தம் உள்ள 20 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நடந்து முடிந்தது.
இந்நிலையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 18 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்துள்ளது. இதில் காங்கிரஸ் மட்டும் 14 இடங்களிலும், ஐயுஎம்எல் கட்சி இரண்டு இடங்களிலும், கேரளா காங்கிரஸ் ஒரு இடத்திலும், ஆர்எஸ்பி கட்சி ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கிறது. அதேநேரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.
காசர்கோடு, கண்ணூர், வடகரா, வயநாடு, கோழிக்கோடு, பாலக்காடு, சாலக்குடி, எர்ணாகுளம், இடுக்கி, ஆழப்புழா, மாவேலிக்கரை, பத்தினம்திட்டா, திருவனந்தபுரம் மற்றும் அட்டிங்கல் (இங்கு வெறும் 685 வாக்குகளில் கம்யூனிஸ்டை வீழ்த்தி உள்ளதாக கூறப்படுகிறது) ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் வென்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மலப்புரத்தில் வென்றுள்ளது. கேரள காங்கிரஸ் கோட்டயத்தில் வென்றுள்ளது. ஆர்எஸ்பி கட்சி கொல்லத்தில் வென்றுள்ளது.
கேரளாவில் மிகவும் கவனிக்கப்பட்ட தொகுதிகள் என்றால் மூன்று தொகுதிகள் அதில் முதன்மையானது ராகுல் காந்தி போட்டியிட்ட வயநாடு. வயநாட்டில் அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி ராஜாவின் மனைவியான ஆனி ராஜா போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அம்மாநில தலைவர் சுரேந்திரன் போட்டியிட்டுள்ளார். இங்கு ராகுல் காந்தி 364422 வாக்குகள் வித்தியாசத்தில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆனி ராஜாவை தோற்கடித்துள்ளார். கேரளாவிலேயே மிக அதிகபட்ச வாக்கு வித்தியாசம் இதுதான்.
அடுத்ததாக திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளரும் நடிகருமான சுரேஷ் கோபி வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் ஆணையம் வெளியிட்ட கடைசி அறிவிப்பின் படி, பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுனில் குமாரைவிட 74686 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரம் லோக்சபா தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ராஜீவ் சந்திரசேகர் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பண்ணயன் ரவீந்திரன் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் சசி தரூர் ஆகியோர் போட்டியில் இருந்தனர். இதில் பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர் ஆரம்பத்தில் முன்னிலையில் இருந்தார்.. இவருக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சியின் சசிதரூர் இருந்தார். சசிதரூரைவிட பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் இடையே தபால் வாக்கு தொடங்கி கடைசி சுற்று வரை கடும் போட்டி நிலவியது. இறுதியாக காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் 16077 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications