Kerala Lottery: ரூ.10 கோடியை தூக்கியே ஆகணும்.. கேரளாவில் அனல் பறக்கும் சம்மர் பம்பர் லாட்டரி சேல்ஸ்! பாலக்காடு டாப்
திருவனந்தபுரம்: கேரளாவில் ரூ.10 கோடி முதல் பரிசு கொண்ட சம்மர் பம்பர் லாட்டரி விற்பனை சூடு பிடித்துள்ளது. இரண்டாம் பரிசு ரூ.1 கோடியும் மூன்றாவது பரிசாக ரூ.5 லட்சம் 12 டிக்கெட்டுகளுக்கும் அளிக்கப்படுகிறது. இதனால் இந்த முறை நமக்கு பரிசு அடிக்கும் என எதிர்பார்த்து பலரும் டிக்கெட்டை வாங்கி குவித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு இதே நாட்களில் 36 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை ஆகியிருந்த நிலையில் தற்போது ரூ.38 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளன.
கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளாவில் லாட்டரிகள் ரொம்பவே பிரபலமாக உள்ளது. சொல்லப்போனால் கேரள அரசே லாட்டரியை அச்சிட்டு விற்பனை செய்து வருகிறது. அங்கு தினசரி லாட்டரி டிக்கெட் குலுக்கல் நடைபெறுகிறது. ரூ.1 கோடி முதல் பரிசு கொண்ட லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் நடைபெறுகிறது.

சம்மர் பம்பர் லாட்டரி
அதேபோல, சீசனுக்கு ஏற்றபடி வருடத்திற்கு ஆறு பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கலும் நடைபெறுகிறது. இதற்கு முதல் பரிசாக பல கோடி ரூபாய் கிடைக்கிறது. வாழ்க்கையில் நமக்கும் அதிர்ஷ்டம் அடித்தால் மொத்த லைஃப்பே மாறிவிடும் என்ற நம்பிக்கையில் லாட்டரி பிரியர்கள், பம்பர் லாட்டரிகளை ஆர்வத்துடன் வாங்குவதை பார்க்க முடிகிறது.
தற்போது கேரளாவில் சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை நடைபெறுகிறது. இந்த டிக்கெட்டிற்கான குலுக்கல் வரும் 28 ஆம் தேதி நடைபெறுகிறது. டிக்கெட் விலை ரூ. 300 ஆகும். முதல் பரிசு ரூ.10 கோடி என்பதால் அதிர்ஷ்டம் அடித்துவிடாதா என்ற ஏக்கத்தில் டிக்கெட்டுகளை வாங்கி குவித்து வருகிறார்களாம் சேட்டன்கள்.
38 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை
இதனால், கடந்த ஆண்டு விற்பனையை இந்த முறை தற்போதே தாண்டிவிட்டதாம். அதாவது கடந்த ஆண்டு சம்மர் பம்பர் டிக்கெட்டுகள் 36 லட்சம் டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை ஆகியிருந்த நிலையில் இந்த ஆண்டு தற்போதே 38,69,930 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. மொத்தம் 42 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்ட நிலையில், இன்னும் ஒரு சில நாட்கள் இருப்பதால் அந்த டிக்கெட்டுகளும் விற்பனையாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கம் போல பாலக்காட்டில்தான் அதிக விற்பனை நடைபெற்றுள்ளது. தமிழகத்தின் எல்லையோர மாவட்டமான பாலக்காட்டில் தற்போது வரை 11.15 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் கேரள தலைநகர் திருவனந்தபுரம் உள்ளது. திருவனந்தபுரத்தில் 4 லட்சத்து 11 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன.
பரிசு விவரங்கள் என்ன?
திரிச்சூரில் 4.09 லட்சம் டிக்கெட்டுகள் தற்போது வரை விற்பனை செய்யப்பட்டுள்ளன. பாலக்காடு மற்றும் திருவனந்தபுரத்திற்கு வெளி மாநில சுற்றுலாப் பயணிகள், தொழில் நிமித்தமாக செல்பவர்கள் அடிக்கடி பயணிப்பதால் அவர்களும் ஆர்வத்துடன் வாங்கி செல்வதாக கேரள லாட்டரி விற்பனையாளர்கள் தெரிவித்தனர். சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கு முதல் பரிசு ரூ.10 கோடி வழங்குவது மட்டுமின்றி இரண்டாம், மூன்றாம் பரிசும் பல லட்சங்களில் அளிக்கப்படுகிறது.
இரண்டாவது பரிசாக ரூ.1 கோடியும் மூன்றாவது பரிசாக ரூ.5 லட்சம் 12 டிக்கெட்டுகளுக்கு அளிக்கப்படுகிறது. நான்காவது பரிசாக ரூ.1 லட்சம் கடைசி 5 டிஜிட்களுக்கு வழங்கப்படுகிறது. ஆறுதல் பரிசு ரூ.1 லட்சம் ஆகும். அதாவது முதல் பரிசு வென்ற அதே எண் டிக்கெட்டில் இருந்து சீரியல் எண் மட்டும் மாறியிருந்தால் ஆறுதல் பரிசு அளிக்கப்படும். கேரளாவில் சட்டமன்ற தேர்தல் பரபரப்புக்கு நடுவே டிக்கெட் விற்பனையும் அனல் பறக்க நடந்து கொண்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications