பணக்கார பெண்ணுடன் நிச்சயம்... மிஸ்டுகால் காதலியை உப்பை கொட்டி புதைத்த காதலன்

பணக்கார பெண்ணுடன் நிச்சயம் ஆன உடனேயே மிஸ்ட் கால் மூலம் கிடைத்த காதலி கசந்து போகவே அவரை கழற்றி விட நினைத்த காதலன் கொன்று உப்பை கொட்டி புதைத்து பாக்குமரத்தை நட்டு வைத்திருக்கிறான். கேரளாவில் இந்த பதைப

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பணக்கார பெண்ணை திருமணம் செய்ய காதலியை கொன்ற காதலன்- வீடியோ

    திருவனந்தபுரம்: பணக்கார பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்பட்டு மிஸ்டுகால் மூலம் கிடைத்த காதலியை கொன்று புதைத்து உப்பை கொட்டியுள்ளார் ராணுவ வீரர் ஒருவர். நிர்வாண நிலையில் சடலத்தை கண்டுபிடித்த போலீசார் தலைமறைவாக உள்ள அந்த ராணுவ வீரரையும் அவரது சகோதரரையும் தேடி வருகின்றனர். சினிமா கதையை மிஞ்சும் இந்த கிரைம் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே நிகழ்ந்துள்ளது.

    ஒரே ஒரு போன் கால் ரேகா மோள் அகில் நாயரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. மிஸ்டுகாலில் தொடங்கிய நட்பு காதலாகி கடைசியில் கொலையில் முடிந்துள்ளது. உண்மை சம்பவங்களை கொண்டு சினிமா எடுக்கும் கேரளா திரை உலகிற்கு அருமையான கிரைம் திரில்லர் கதை கிடைத்துள்ளது.

    பெண் பொறியாளர் ரேகா மோள் கடந்த மாதம் 21ஆம் தேதி தனது தோழிகளைப் பார்க்க எர்ணாகுளம் செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு போனவர்தான் அதன்பிறகு காணவில்லை. மாயமான அவரை வீட்டினர் சொந்தக்காரர்கள் வீட்டில் தேடி வந்தனர். கிடைக்காமல் போகவே போலீசில் புகார் அளித்தனர்.

    மகளை காணாது தவித்துப்போன பெற்றோர் பூவார் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் செல்போன் எண்ணை வைத்து நூல் பிடித்தனர். ரேகா மாயமான நாளில் அகில் என்பவரின் போன் வந்துள்ளது. கடைசியாக அம்பூரி பகுதியில் ரேகாவின் போன் சுவிட்ச் ஆஃப் ஆனது. அதே நாளில் அகில் நம்பருக்கு அடிக்கடி பேசிய எண்ணை பார்த்த போது அது ஆதர்ஷ் என்பவருக்கு சொந்தமானது என்று கண்டுபிடித்தனர்.

     சடலமாக சிக்கிய ரேகா

    சடலமாக சிக்கிய ரேகா

    ஆதர்ஷை கைது செய்த போலீசார் தங்கள் பாணியில் விசாரிக்கவே, ரேகாவை கொன்று புதைத்து விட்டதாக கூறினார். அவர் கூறிய ஒவ்வொரு தகவலும் அதிர்ச்சி ரகமாக இருந்தது. ரேகாவை அம்பூரியில் உள்ள அகிலின் வீட்டின் தோட்டத்தில் குழிதோண்டி புதைத்திருப்பதாக கூறவே அங்கு சென்ற போலீசார் ரேகாவின் உடலை தோண்டி எடுத்தனர். நிர்வாண நிலையில் இருந்த ரேகாவின் உடலை சுற்றியும் உப்பை கொட்டியிருந்தனர். பார்த்த உடனே மனதை பதைபதைக்க வைத்தது. நெஞ்சை உறைய வைக்கும் இந்த கொலையை எதற்காக செய்தனர் என்று விசாரித்தனர்.

     ராணுவ வீரருக்கு வந்த மிஸ்டுகால்

    ராணுவ வீரருக்கு வந்த மிஸ்டுகால்

    ஆறு வருடங்களுக்கு முன்பு வந்த ஒரு மிஸ்ட்கால்தான் இத்தனை சம்பவங்களுக்கும் காரணம் என்று தெரியவந்தது. தமிழக கேரளா எல்லைப்பகுதியில் அம்பூரி மலையோர கிராமத்தைச் சேர்ந்தவர் அகில் நாயர். டெல்லியில் ராணுவத்தில் வேலை செய்கிறார். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு வந்த போது அவரது போனுக்கு ஒரு மிஸ்டு கால் வந்தது. யாரது புது நம்பரா இருக்கே என்று அந்த நம்பருக்கு திரும்ப கூப்பிட்டார் அகில்.

     நட்பு காதலானது

    நட்பு காதலானது

    அந்த நம்பரில் பேசியது ஒரு பெண். அவர் திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றின் கரை அருகே உள்ள பூவார் பகுதியைச் சேர்ந்த ராஜன் மகள் ரேகாமோள் என்பதும் தெரியவந்தது. நம்பர் மாறிவிட்டதாக கூறி வைத்து வைத்து விட்டார் ரேகா. அத்தோடு அகில் ரேகா இடையேயான நட்பு துண்டிக்கப்படவில்லை. தொடர்ந்து அந்த நம்பரில் பேசி நட்பை வளர்த்தார் அகில் நட்பு காதலானது.

     கழற்றி விட்ட அகில்

    கழற்றி விட்ட அகில்

    ரேகாவிற்கு எர்ணாகுளம் அருகே வேலை கிடைத்தது. அகிலும் தனது ராணுவப்பணியை தொடர டெல்லிக்கு போய்விட்டார். ரேகாவை திருமணம் செய்வதாகவும் கூறி வாக்குறுதி அளித்தார் அகில். நாளடைவில் அகில் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. அதற்குக் காரணம் அகிலுக்கு பணக்கார பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இது ரேகாவிற்கு தெரியவரவே கொதித்துப்போனார்.

     ஆதாரத்தை காட்டிய ரேகா

    ஆதாரத்தை காட்டிய ரேகா

    ரேகா ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்பதால் அகில் குடும்பத்தினர் ரேகாவை புறக்கணித்தனர். ஆனால் ரேகாவிற்கு அகிலை விட மனமில்லை. தன்னை திருமணம் செய்யாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்றார். அகிலுக்கு நிச்சயம் செய்த பெண்ணை பார்த்து தங்களின் காதல் பற்றியும் அதற்கான ஆதாரங்களையும் காட்டினார் இதனால் பிரச்சினை ஏற்பட்டது. அகிலுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. ரேகாவின் கதையை முடிக்க திட்டம் போட்டார்.

     ரேகா கொலை

    ரேகா கொலை

    அகிலின் சகோதரர் ராகுல், அவரது நண்பர் ஆதர்ஷ் உடன் இணைந்து திட்டம் போட்டார். ரேகாவிற்கு போன் செய்த அகில் தனது அம்பூரி வீட்டிற்கு வரச்சொன்னார். அதனை உண்மை என்று நம்பிய ரேகா, தனது தோழிகளை சந்திக்க செல்வதாக வீட்டில் கூறிவிட்டு இனிப்பு பெட்டியுடன் அகிலை பார்க்கப் போனார். போன இடத்தில் ரேகாவை மிரட்டினார் அகில் அதற்கு மசியவில்லை. தனது சகோதரனுடன் ரேகாவை கொன்று குழியில் போட்டு மூடி உப்பை கொட்டி வைத்து விட்டான்.

     சிக்கிய சடலம்

    சிக்கிய சடலம்

    மகளை காணாத தவித்த பெற்றோர் எர்ணாகுளம் சென்று விசாரித்த போது அங்கு வரவில்லை என்று தெரியவந்தது. இதனையடுத்தே போலீசில் புகார் அளித்தனர். ஆதர்ஷ் வசமாக சிக்கவே உண்மை வெளியே வந்தது. ரேகாவின் சிதிலமடைந்த சடலத்தைப் பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.
    அகில் வீட்டிற்குப் போன போது போலீஸ் தேடுவதை உணர்ந்த அகிலும் அவரது அப்பாவும் தலைமறைவாகிவிட்டனர்.

     நிர்வாணமாக புதைப்பு

    நிர்வாணமாக புதைப்பு

    அம்பூரி தட்டன் முக்கு பகுதியில் புதிய வீடு கட்டி வருவதாக கூறி ரேகாவை வரவழைத்தார் அகில். நெய்யாற்றின்கரை வந்த ரேகாவை வாடகைக் காரில் வந்த அகில் ஏற்றிக்கொண்டு தனது வீடு இருக்கும் அம்பூரிக்கு அழைத்துக்கொண்டு வந்தார். அன்பாக பேசிய அகில் பின்னர் தனது வேறு முகத்தை காட்டவே அவர்களிடம் இருந்து தப்பிக்க நினைத்தார் ரேகா. ஆனால் ராகுலும் அகிலும் இணைத்து காருக்குள்ளேயே கழுத்தை நெரித்தனர். சத்தம் வெளியே கேட்காமல் ஆக்ஸிலேட்டரின் சத்தத்தை அதிகப்படுத்தியுள்ளனர். தோட்டத்தின் பின்புறம் தயாராக வைத்திருந்த குழியில் போட்டு மூடி உப்பை கொட்டி விட்டு பாக்குமரங்களை நட்டு வைத்து விட்டதாக ஆதர்ஷ் தனது வாக்கு மூலத்தில் கூறியுள்ளான். அகில் சிக்கினால் மட்டுமே ரேகாவை நிர்வாணமாக புதைத்து உப்பை கொட்டியது ஏன் என்று தெரியவரும்.

     போலீஸ் தேடுதல் வேட்டை

    போலீஸ் தேடுதல் வேட்டை

    அகிலின் சகோதரரையும் நண்பன் ஆதர்ஷையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதில் 14 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அகில் டெல்லி சென்றிருக்கலாம் என சந்தேகப்படும் போலீசார், தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இளம் பெண் கொன்று நிர்வாண நிலையில் புதைக்கப்பட்ட சம்பவம் திருவனந்தபுரம் தமிழக கேரளா எல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிஸ்டுகாலில் தொடங்கிய நட்பு காதலாகி கடைசியில் கொலையில் முடிந்துள்ளது. உண்மை சம்பவங்களை கொண்டு சினிமா எடுக்கும் கேரளா திரை உலகிற்கு அருமையான கிரைம் திரில்லர் கதை கிடைத்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+