Fish Curry: மாந்திரீகத்தில் வெறி! கொதிக்க கொதிக்க மீன் குழம்பை மனைவி மீது ஊற்றிய கணவர் மீது வழக்கு
திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கொல்லத்தில் பேய் பிடித்திருப்பதாக கூறி மனைவி மீது சுடச் சுட மீன் குழம்பை ஊற்றிய கணவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள கணவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் சஜீர். இவர் தனது மனைவி ரெஜிலாவுக்கு பேய் பிடித்திருப்பதாக கருதி தாக்கினாராம். இது குறித்து ரெஜிலா, போலீஸில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் சஜீத்தை வரவழைத்து எச்சரித்து அனுப்பினர்.

சஜீத்திற்கு மாந்திரீகத்தில் நம்பிக்கை அதிகம் என தெரிகிறது. இதனால் அவ்வப்போது மாந்திரீகரின் பேச்சை கேட்டுக் கொண்டு தனது மனைவியை சஜீத் துன்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் அடுத்தடுத்து ரெஜிலா காவல் நிலையத்திற்கு வருவதும், சஜீத்தை போலீஸார் எச்சரிப்பதுமாக இருந்ததாம். ஆனாலும் சஜீத் அடங்கவில்லை. தனது மனைவி பேய் பிடித்திருக்கிறது என்பதை ஆணித்தரமாக நம்பினாராம்.
இதனால் தனது கிராமத்தில் உள்ள மாந்திரீகர்களை சஜீத் சந்தித்து பேய் விரட்டுவது எப்படி என கேட்டு அவர்களிடம் பயிற்சியையும் எடுத்துக் கொண்டு வந்தாராம். அந்த வகையில் அண்மையில் கூட ஒரு மந்திரவாதியை அவர் சந்தித்தாராம். அப்போது ரெஜிலாவுக்கு சில சடங்குகளை செய்யுமாறு அந்த மந்திரவாதி கூறினாராம்.
அந்த வகையில் சம்பவத்தன்று சடங்கு செய்வதாக கூறி ரெஜிலாவை வலுக்கட்டாயமாக இழுத்து வந்த சஜீத் அவரது உடம்பெல்லாம் சாம்பல் பூசினாராம். பின்னர் மாந்திரீக கயிறுகளை கட்டி பேய் ஓட்ட மந்திரங்களையும் சஜீத் சொன்னாராம்.
இதையெல்லாம் பார்த்து அலறிய ரெஜிலா, இந்த சடங்குகளை செய்து கொள்ள மறுப்பு தெரிவித்தாராம். இதனால் சஜீத் ஆத்திரமடைந்து ரெஜிலாவை கடுமையாக தாக்கினாராம். அப்போது அங்கு வந்த அவரது மகன் தனது தந்தையை தடுத்துள்ளார். இதனால் அவரையும் சஜீத் தாக்கினாராம்.
அப்படியும் ஆத்திரம் அடங்காத சஜீத், நேராக சமையல் அறைக்கு ஓடினார். அங்கு அடுப்பில் சுடச்சுட மீன் குழம்பு இருந்ததாம். அதை கொண்டு வந்து ரெஜிலா முகத்தில் ஊற்றினாராம். சூடு தாங்காமல் ரெஜிலா அலறி துடித்தாராம்.
இந்த அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் ஓடி வந்து ரெஜிலாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். உடனே இந்த சம்பவத்தால் அஞ்சிய சஜீத், தலைமறைவாகிவிட்டாராம். ரெஜிலா கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் சஜீத் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்களாம்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications