கல்யாணம் ஆகாமல் பிறந்த குழந்தை.. முகத்தில் தண்ணீரை ஊற்றி மூச்சு திணறடித்து கொன்ற தாய்.. கேரளாவில் ஷாக்
திருவனந்தபுரம்: கல்யாணம் ஆகாமலே தவறான உறவால் தனக்கு குழந்தை பிறந்த நிலையில், அந்த பிறந்த குழந்தையின் முகத்தில் தண்ணீரை ஊற்றி மூச்சு திணறடித்து தாய் கொலை செய்திருக்கிறார். அவரை கேரளாவின் பத்தினம்திட்டா போலீசார் கைது செய்தனர்.
இன்று வாழ்க்கையில் காதல் என்பது எது என்பதே தெரியாமல் கண்டிபடி வாழ்ந்து கடைசியில் வாழ்க்கையை சீரழிக்கிறார்கள். 16 வயதிலேயே காதலித்து காதலனுடன் உறவிலும் இருந்து குழந்தைக்கு தாயாகுவது என்கிற நிலை சில பகுதிகளில் உள்ளது.

இன்னொரு பக்கம் காதல் என்ற பெயரில் குடும்பம் நடத்தாமலே சேர்ந்து வாழ்வது, சேர்ந்து சுற்றுவது, குழந்தை பெற்றுக்கொள்வது, இறுதியில் வாழ பிடிக்கவில்லை என்று வருவது என்று இன்னொரு வகையில் இருக்கிறார்கள்.. திருமணம் ஆனவர்களுடன் சுற்றுவது, திருமணம் ஆன பெண்ணுடன், திருமணம் ஆகாத பெண் சுற்றுவது என சீரழிவுகள் நடக்கின்றன. அப்படியான ஒரு சீரழிவு தான் கேரளாவின் பத்தினம் திட்டாவில் நடந்துள்ளது.
கேரளாவின் பத்தனம்திட்டா அருகே மேலவெட்டிப்புரம் பகுதியை சேர்ந்த நீது(வயது 20). இவர் திருச்சூரை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்தார். இருவரும் அடிக்கடி சந்தித்து வெளியே உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இருவருக்கும் நெருக்கம் அதிகரித்த காரணத்தால் நீது கர்ப்பம் ஆனார்.
இந்த நிலையில் கடந்த வாரம் நீதுவுக்கு பெண் குழந்தை பிறந்தது. திருமணம் ஆகாமல் குழந்தை பிறந்தது வெளியே தெரிந்தால் அவமானம் ஆகி விடுமே என்று நீது பயந்தார். அதைத்தொடர்ந்து தனக்கு பிறந்த குழந்தை என்று கூட பார்க்காமல் அதை கொன்றுவிட முடிவு செய்தார். பின்னர் குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே அதை குளியல் அறைக்கு தூக்கி சென்று முகத்தில் தண்ணீரை ஊற்றி மூச்சு திணறடித்து கொன்றுள்ளார்.
இதுபற்றி பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லா போலீசுக்கு அக்கம் பக்கத்தினர் புகார் கூறினார்கள். சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரித்த திருவல்லா போலீசார், உண்மை என்பது அறிந்ததுடன், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது குழந்தையின் மூக்கில் தண்ணீர் புகுந்ததால் மூச்சு திணறி இறந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து நீதுவை போலீசார் கைது செய்தனர்.
கல்யாணம் ஆகாமலே தவறான உறவால் தனக்கு குழந்தை பிறந்த நிலையில், அந்த பிறந்த குழந்தையின் முகத்தில் தண்ணீரை ஊற்றி மூச்சு திணறடித்து கொன்றதாக தாய் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications