பிரேக் பிடிக்கல.. குறுக்கே வந்த மாடு மீது மோதி தடம்புரண்ட சோரனூர் எக்ஸ்பிரஸ் ரயில்.. அலறிய பயணிகள்
திருவனந்தபுரம்: கேரளா பாலக்காடு மாவட்டத்தில் நீலாம்பூர் ரோடு-சோரனூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. இந்த ரயில் மாடு மீது மோதிய நிலையில் தண்டவாளத்தை விட்டு ரயில் இறங்கி தடம் புரண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரளா மாநிலம் நீலாம்பூர் ரோடு-சோரனூர் இடையே எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (06474) இயங்கி வருகிறது. இந்த ரயில் புதன்கிழமை தோறும் நீலாம்பூர் ரோடு ரயில் நிலையத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு 8.40 மணிக்கு சோரனூர் ரயில் நிலையத்தை சென்றடையும்.

இந்நிலையில் வழக்கம்போல் இந்த ரயில் இன்று இரவு 7 மணிக்கு கேரளா நீலாம்பூர் ரோடு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. ரயிலில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.
இந்த ரயில் பாலக்காட்டில் உள்ள வல்லப்புழா என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று ரயில் தண்டவாளத்தில் மாடுகள் வந்தது. இதை பார்த்த ரயில் என்ஜின் டிரைவர் ரயிலின் வேகத்தை குறைத்தார். மாடு மீது மோதாமல் ரயிலை பிரேக் பிடித்து நிறுத்த முயன்றார். ஆனால் ரயிலின் வேகம் அதிகமாக இருந்தது. இதனால் என்ஜின் டிரைவரால் ரயிலை கட்டுப்படுத்த முடியவில்லை.
ரயில் தொடர்ந்து சென்று கொண்டிருந்ததால் மாடுகள் மீது மோதியது. அதோடு மாடு மீது மோதிய ரயில் திடீரென்று தடம் புரண்டது. ரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு இறங்கி நின்றது. இந்த வேளையில் பயணிகள் அலறியபடி ரயிலில் இருந்து வேகமாக இறங்கினர்.
இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுபற்றி அறிந்த ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று தடம் புரண்ட ரயிலை தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தும் பணியை மேற்கொண்டனர். மேலும் ரயில் தடம் புரண்டது பற்றியும் அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.
இதுபற்றி பாலக்காடு ரயில்வே மண்ட மக்கள் தொடர்பு அதிகாரி கூறுகையில், ‛‛நீலாம்பூர் ரோடு-சோரனூர் எக்ஸ்பிரஸ் ரயில் பாலக்காடு அருகே வல்லபுழாவில் தடம் புரண்டது. மாடுகள் மீது ரயில் மோதி தடம் புரண்டது. இதில் காயம், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்து காரணமாக 3 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒரு ரயிலின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த தண்டவாளத்தில் ரயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது'' என்றார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications