உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெல்லப் போவது யார்? கேரள ஜோதிடரின் கணிப்பை பாருங்க மக்களே!
திருவனந்தபுரம்: உலக கோப்பை கிரிக்கெட் கோப்பையை வெல்லும் அணி யார் என்பது குறித்து கேரள ஜோதிடர் கணித்துள்ளார். இதனால் உலக கோப்பை போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மே 30 தொடங்கி ஜூலை 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த போட்டியில் இந்த ஆண்டு இங்கிலாந்தில் உள்ள 10 நகரங்களில் நடைபெறுகிறது.
இதன் இறுதி போட்டி லண்டன் லார்ட்சில் ஜூலை 14-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி மான்செஸ்டரில் நடைபெறுகிறது. பாகிஸ்தானிடம் உலக கோப்பையில் ஒரு முறை கூட இந்தியா தோற்கவில்லை.

இந்தியா
இதனால் இன்றைய போட்டிக்கான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் இது வரை நடந்த உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானை 6 முறை எதிர்கொண்ட இந்தியா அனைத்திலும் வென்றுள்ளது. அது போல் இந்த ஆண்டும் இந்தியா கோப்பையை வெல்ல வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.

கண்ணனூர்
இந்த நிலையில் உலக கோப்பை போட்டியில் எந்த அணி வெல்லும் என்பது குறித்து கேரள ஜோதிடர் ஒருவர் கணித்துள்ளார். கேரள மாநிலம் கண்ணனூரை சேர்ந்தவர் எம் கே தாமோதரன். இவர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியாவார்.

விளையாட்டு
அரசியல், விளையாட்டு உள்பட பல்வேறு விஷயங்களை கணித்து வருகிறார். அது போல் 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் என இவர் கணித்தது போலவே கோப்பையை இந்தியா வென்றது. அது போல் 2019-ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை போட்டியிலும் இந்தியாவே வெல்லும் என கணித்துள்ளார்.

கோஹ்லி
இதுகுறித்து தாமோதரன் கூறுகையில் 2011-ஆம் ஆண்டு 2,6,7 ஆகிய எண்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வந்தன. தோனியின் விதி எண் 33, அதன் கூட்டுத் தொகை 6. அதனால் அவர் தலைமையிலான அணி அப்போது வெற்றி பெற்றது. தற்போது விராட் கோலி பிறந்த தேதி 5.11.1988. இதில் அவர் பிறந்த எண் 5.

இந்தியா வெற்றி பெறும்
தோனியின் எண்களுக்கும் விராத் கோஹ்லியின் எண்களுக்கும் அதிக மாற்றமில்லை. கோஹ்லியின் விதி எண்ணும் 33தான். இவரது ராசி விருச்சிகம். இது 9-ஆம் எண்ணுக்கானது. இதனால் 3,6, 9 ஆகிய எண்கள் ராசியானது. அவரது வயது 30, கூட்டுத் தொகை 3, இது 12-ஆவது உலக கோப்பை இதன் கூட்டுத் தொகையும் 3. எனவே இவற்றை வைத்து பார்க்கும் போது இந்த உலக கோப்பை தொடரிலும் இந்தியாவே வெற்றி பெறும் என தெரிவித்தார்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications