கேரளாவை தட்டித் தூக்குதாம் காங்கிரஸ்.. மோடி அரசுக்கு எதிராக மிகப்பெரிய அலை.. மனோரமா சர்வே ரிசல்ட்!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவில் எந்தக் கட்சி எத்தனை இடங்களைப் பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு முடிவை வெளியிட்டுள்ளது மனோரமா நியூஸ். மோடி அரசின் செயல்பாடு குறித்த மக்களின் கருத்து முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் தற்போதே தகிக்கத் தொடங்கிவிட்டது. மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக உள்ளது. அதேசமயம், பாஜகவை வீழ்த்திட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் பலவும் ஓரணியில் திரண்டுள்ளன.

Kerala people opinion against modi government supports opposition alliace as per manorama polls

இந்நிலையில், கேரளாவின் மனோரமா நியூஸ் மற்றும் மும்பையின் Voters Mood இணைந்து கேரளாவில் லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக கருத்து கணிப்பு நடத்தின. இந்த கருத்துக் கணக்கெடுப்பில் 28,000 வாக்காளர்கள் கலந்துகொண்டனர். கேரளாவின் 140 சட்டமன்றத் தொகுதிகளில் தலா 200 வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட நேர்காணலின் அடிப்படையில் ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, கேரளாவில் மொத்தம் உள்ள 20 லோக்சபா தொகுதிகளில், காங்கிரஸ் தலைமையிலான UDF கூட்டணி 17 இடங்களில் வெல்லும் என்றும், கேரளாவில் ஆளும் இடதுசாரிகளின் LDF கூட்டணி 3 இடங்களைக் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தலைமமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கேரளாவில் ஒரு இடம் கூட கிடைக்காது என இந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, கேரள மாநிலத்தில், காங்கிரஸ் கூட்டணிக்கு 47.22% வாக்குகளும் இடதுசாரி கூட்டணிக்கு 37.47% வாக்குகளும் கிடைக்கும் என்றும், பாஜகவுக்கு 15.50% வாக்குகள் கிடைக்கும் என்றும், இதர கட்சிகள் 3.25% வாக்குகள் பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Kerala people opinion against modi government supports opposition alliace as per manorama polls

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில், கேரளாவில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் 19 இடங்களை வென்றது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் வென்றார். ஆலப்புழா தொகுதியில் மட்டுமே சிபிஐஎம் கூட்டணி வென்றது. பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மனோரமா நியூஸ், பல்வேறு விஷயங்களையும் இந்த கருத்துக்கணிப்பின்போது மக்களிடம் கேட்டு அதன் முடிவுகளையும் வெளியிட்டுள்ளது. அதன் விவரங்கள் வருமாறு:

மோடி அரசின் செயல்பாடு

மிகவும் நன்றாக உள்ளது: 9.98%

நன்றாக உள்ளது: 17.17%

ஆவரேஜ்: 30.24 %

செயல்பாடு மோசம்: 28.07%

மிக மோசம்: 14.54%

தேசிய எதிர்க்கட்சி கூட்டணியின் செயல்திறன்

மிகவும் நன்றாக உள்ளது: 21.01%

நன்றாக உள்ளது: : 33.95%

ஆவரேஜ்: 25.21%

செயல்பாடு மோசம்: 15.79%

மிக மோசம்: 4.04%

கேரளாவில் ஆளும் பினராயி விஜயன் அரசின் செயல்பாடு

மிகவும் நன்றாக உள்ளது: 18.95%

நன்றாக உள்ளது: : 33.23%

ஆவரேஜ்: 29.05%

செயல்பாடு மோசம்: 14.28%

மிக மோசம்: 4.49%

கேரளாவில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடு

மிகவும் நன்றாக உள்ளது: 17.94%

நன்றாக உள்ளது: : 33.06%

ஆவரேஜ்: 27.04%

செயல்பாடு மோசம்: 18.72%

மிக மோசம்: 2.94%

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+