பொன்னாரிடம் போலீஸ் முறையின்றி நடந்து கொண்டது.. கேரள பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு!
கேரள போலீஸ் பாஜக கட்சியை சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் முறையின்றி நடந்து கொண்டதாக கேரளா பாஜக தெரிவித்துள்ளது.
Recommended Video

திருவனந்தபுரம்: கேரள போலீஸ் பாஜக கட்சியை சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் முறையின்றி நடந்து கொண்டதாக கேரளா பாஜக தெரிவித்துள்ளது.
சபரிமலை கோவில் நடை திறந்து இருப்பதையொட்டி அங்கு மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்று சபரிமலை கோவிலுக்குள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செல்ல முயன்றார்.

ஆனால் சபரிமலை கோவிலுக்குள் அவர் தொண்டர்களுடன் செல்ல முயன்றதால் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. கடைசியாக அவர் தனியாக கேரள அரசு ஏற்பாடு செய்திருந்த அரசு பேருந்தில் சபரிமலை நோக்கி அனுப்பப்பட்டார்.
பாஜக கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் அரசு பேருந்தில் அனுப்பப்பட்டது பாஜக கட்சிக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கேரள போலீஸ், பொன்.ராதாகிருஷ்ணனிடம் சரியாக நடந்து கொள்ளவில்லை. அவரை போலீஸ் முறையின்றி கையாண்டது என்று பாஜக குற்றச்சாட்டு வைத்துள்ளது. கேரள போலீஸ் அவரிடம் மிகவும் கண்டிப்பாக நடந்து கொண்டதாக கேரளா பாஜக குற்றச்சாட்டு வைத்துள்ளது.
மேலும் கேரள போலீஸ் இப்படித்தான் பாகுபாடுடன் நடந்து கொள்கிறது. கேரள போலீசின் இரட்டை நிலைப்பாடு மீண்டும் தெரிந்துவிட்டது என்றும் கூறியுள்ளது. கேரள போலீஸ் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் இடையே நடந்த பேச்சுவார்த்தை இன்று பெரிய விவாதம் ஆனது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications