கேரள லாட்டரி.. விழுந்தது ரூ.12 கோடி.. தமிழ்நாடு பார்டர் மாவட்டத்தில் வாங்கிய டிக்கெட்.. அதிர்ஷ்டசாலி
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் பூஜா பம்பர் லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் நடைபெற்றது. முதல் பரிசுத்தொகையாக ரூ.12 கோடி கொண்ட லாட்டரி JC 325526 என்ற எண்ணிற்கு விழுந்துள்ளது. முதல் பரிசுத்தொகை வென்ற அதிர்ஷ்டசாலி யார்? என்பது இன்னும் தெரியவில்லை என்பதால் பரிசு வென்றவர் யார் என்ற எதிர்பார்ப்பு கேரள மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி பூஜா பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை தொடங்கியது. முதல் பரிசுத்தொகையாக ரூ.12 கோடி கொண்ட இந்த லாட்டரி டிக்கெட்டுகளை கேரள மக்கள் ஆர்வத்துடன் வாங்கி வந்தனர். மொத்தம் 40 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையானது. ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 300 ஆகும். கடந்த இரு மாதங்களாக விறுவிறுப்பாக டிக்கெட் விறபனை நடைபெற்று வந்தது.

ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மெக்கானிக்கிற்கு விழுந்தது. வயநாட்டில் அல்தாப் என்ற கர்நாடக மெக்கானிக் வாங்கிய லாட்டரிக்கு ரூ.25 கோடி கிடைத்தது. 15 வருடங்களாக டிக்கெட் வாங்கி வந்த அவருக்கு முதல் முறையாக பரிசுத்தொகை அடித்து இருந்தது.
வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு முதல் பரிசுத்தொகை அடித்ததால், தமிழ்நாடு, கர்நாடக மாநிலத்தில் கேரள எல்லையோர மாவட்டங்களை சேர்ந்த லாட்டரி பிரியர்களும் கேரளாவிற்கு செல்லும் போது டிக்கெட்டுகளை வாங்கினர். இந்த லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நேற்று பிற்பகல் திருவனந்தபுரம் லாட்டரி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ரூ.12 கோடிக்கான முதல் பரிசுத்தொகை JC 325526 என்ற எண்ணிற்கு விழுந்துள்ளது.
கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள கே.எஸ்.ஆர்.டிசி பேருந்து நிலையம் அருகே உள்ள ஜெயக்குமார் லாட்டரி ஏஜென்சி என்ற கடையில் இந்த டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஏஜென்சி கமிஷனாக ரூ.1.2 கோடி பரிசுத்தொகை விழும். முதல் பரிசுத்தொகை வென்ற அதிர்ஷ்டசாலி யார் என்று இன்னும் தெரியவில்லை. கொல்லம் பேருந்து நிலையம் அருகே உள்ள கடையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பதால் தமிழ்நாட்டை சேர்ந்த யாருக்கும் விழுந்து இருக்கலாம் என்று கூட சொல்லப்படுகிறது.
முதல் பரிசுத்தொகை வென்ற அதிர்ஷ்டசாலி யார் என்பதை கேரள மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள். இரண்டாவது பரிசாக 5 டிக்கெட்டுகளுக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. ஒரு கோடி வென்ற டிக்கெட்டுகளின் விவரம்: JA 378749,JB 939547, JC 616613, JD 211004, JE 584418 ஆகிய எண் கொண்ட டிக்கெட்டிற்கு இரண்டாவது பரிசு விழுந்துள்ளது. கமிஷன் தொகையாக இந்த பரிசுக்கு ரூ. 50 லட்சம் பிடித்தம் செய்யப்படும். அதுபோக வரிப்பிடித்தமும் செய்யப்படும்.
மூன்றாவது பரிசாக 5 டிக்கெட்டுகளுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது. 5 லட்சம் பரிசுத்தொகை அடித்த டிக்கெட் எண்களின் விவரம்:-
JA 865014
JB 219120
JC 453056
JD 495570
JE 200328
4-வது பரிசாக 5 டிக்கெட்டுகளுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படுகிறது. அதன் விவரம்:
JA 865014
JB 219120
JC 453056
JD 495570
JE 200328
5-வது பரிசாக 5 டிக்கெட்டுகளுக்கு தலா ரூ.2 லட்சம் பரிசுத்தொகை வழங்கபடுகிறது
JA 759527
JB 911608
JC 821081
JD 878866
JE 156782
கேரள லாட்டரி ரிசல்ட்களை அந்த மாநில லாட்டரிதுறை இணையதளத்தில் உறுதி செய்து கொள்ளவேண்டும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. கேரள லாட்டரிகளை பொறுத்தவரை தமிழத்தில் விற்பனை செய்வது சட்ட விரோதம் ஆகும். கள்ளச்சந்தையில் டிக்கெட்டுகளை வாங்கினால் பரிசுத்தொகையை கேரள அரசால் மறுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications