பூஜா பம்பர் லாட்டரி.. டிக்கெட் விற்பனையில் இதுவரை நடக்காத சம்பவம்! அதிர்ச்சியில் கேரள சேட்டன்கள்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கலில் பெயிண்ட் கடை ஊழியருக்கு முதல் பரிசாக ரூ.25 கோடி அடித்த நிலையில், தற்போது ரூ.12 கோடி முதல் பரிசு கொண்ட பூஜா பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த டிக்கெட்டிற்கான குலுக்கல் வரும் 22 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கேரள லாட்டரி வியாபாரிகளை அதிர்ச்சி அடைய வைத்து இருக்கிறது டிக்கெட் சேல்ஸ்.

கேரளாவில் பூஜா பம்பர் லாட்டரி விற்பனை தற்போது நடைபெற்று வருகிறது. வரும் 22 ஆம் தேதி குலுக்கல் நடைபெற உள்ளது. இந்த டிக்கெட்டிற்கான முதல் பரிசு ரூ. 12 கோடி வழங்கப்படுகிறது. டிக்கெட்டின் விலை ரூ. 300 ஆகும்.

kerala-pooja-bumper-lottery-sales-drop-significantly-vendors-express-concern

கேரள லாட்டரி டிக்கெட்

கேரளாவில் லாட்டரி டிக்கெட்டுகளுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. தினமும் லாட்டரிகள் விற்பனை செய்யப்பட்டாலும் பல கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட பம்பர் லாட்டரிகளுக்கு பெரும் எதிர்பார்ப்பு லாட்டரி பிரியர்கள் மத்தியில் ஏற்படும்.

சொல்லப்போனால், கேரளா மட்டும் இன்றி தமிழ்நாடு, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்கள் கூட இந்த லாட்டரி டிக்கெட்டுகளை விரும்பி வாங்குவதை பார்க்க முடிகிறது. இதனால் பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை எப்போதுமே அனல் பறக்கும். ஆனால் இந்த முறை வழக்கத்திற்கு மாறாக பூஜா பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் கடும் வீழ்ச்சியை சந்தித்திருப்பது லாட்டரி விற்பனையாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு வாரத்தில் குலுக்கல்

குலுக்கலுக்கு இன்னும் இரண்டு வாரமே உள்ள நிலையில், இதுவரை வெறும் 26 லட்சம் டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. கடந்த முறை 45 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டு 39 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகின. ஆனால், இந்த ஆண்டு எதிர்பார்த்ததை விட டிக்கெட் விற்பனை ரொம்பவே மந்தமாகியுள்ளது.

டிக்கெட் விற்பனை சமீபத்தில் எந்த பம்பர் டிக்கெட்டும் இந்த அளவு குறைவாக இருந்தது இல்லை என்றும் தெரிவிக்கிறார்கள் லாட்டரி வியாபாரிகள். இந்த ஆண்டு பூஜா பம்பர் லாட்டரி டிக்கெட் வழக்கத்திற்கு மாறாக தாமதமாக விற்பனை தொடங்கியது. திருவோணம் பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கல் திட்டமிட்ட தேதியை விட ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.

40 சதவீதமாக ஜிஎஸ்டி உயர்வு

செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த குலுக்கல் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெற்றது. இந்த குலுக்கல் முடிந்த பிறகே பூஜா பம்பர் டிக்கெட் விற்பனைக்கு வந்தது. இந்த தாமதமும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் கொண்டு வந்தது. இதில் லாட்டரிகளுக்கான ஜிஎஸ்டி 40 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

இதன் காரணமாக ஏற்படும் இழப்பை சரிகட்ட கேரள லாட்டரி துறை ஏஜென்ட்களுக்கான கமிஷன் தொகையை குறைத்தது. இதனால், லாட்டரி விற்பனை செய்யும் தொழிலாளர்களின் வருவாய் வீழ்ச்சி அடைந்தது. தற்போது டிக்கெட் விற்பனையும் மந்தமாகி இருப்பது அவர்களை மேலும் கலக்கம் அடைய வைத்துள்ளது.

சபரிமலை சீசன் தொடங்கியதும்..

பிரதான லாட்டரி அலுவலகங்களில் இருந்து டிக்கெட்டுகள் ரிலீஸ் செய்யப்பட்டாலும் சிறு வியாபாரிகளிடம் இந்த டிக்கெட்டுகள் தேங்கி கிடக்கின்றன. மொத்த வியாபாரிகளிடம் இருந்து லாட்டரி டிக்கெட் வாங்கும் சிறு வியாபாரிகளுக்கு ஒரு டிக்கெட்டுக்கு ரூ.7.35 (50 ரூபாய் டிக்கெட்டில்) கமிஷன் தொகையாக கிடைத்தது. தற்போது அது 6.35 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

தற்போது லாட்டரி விற்பனை குறைவாக இருந்தாலும் குலுக்கலுக்கு இன்னும் நாட்கள் இருப்பதாலும் சபரிமலை சீசன் தொடங்க இருப்பதாலும் லாட்டரி விற்பனை சூடுபிடிக்க தொடங்கிவிடும் என்று கேரள லாட்டரி விற்பனையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+