கேரளா.. உள்ளே வரும் பாஜக! புதிய சர்வேயில் காங்கிரஸுக்கு ஷாக்.. அப்போ இடதுசாரிகள் நிலை என்ன?
திருவனந்தபுரம்: தமிழ்நாட்டைப் போலவே கேரளாவிலும் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே கேரளாவில் எந்த கட்சி வெல்ல வாய்ப்பு அதிகம் என்பது தொடர்பாக புதிய சர்வே வெளியிடப்பட்டுள்ளது. இந்த சர்வே முடிவுகளில் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமான சில கருத்துகள் இருக்கிறது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.!
கேரளாவில் இப்போது இடதுசாரிகள் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாகவே அங்கு இடதுசாரிகளே ஆட்சியில் இருக்கும் சூழலில், இப்போது அங்குத் தேர்தல் நடக்கிறது. இதற்கிடையே கேரளா தேர்தல் தொடர்பாக மாத்ருபூமி ஊடகம் சர்வே ஒன்றை வெளியிட்டுள்ளது. அது காங்கிரஸ் கட்சிக்கு கடும் அதிர்ச்சி தருவதாகவே இருக்கிறது.

கேரள தேர்தல்
ஏனென்றால் இதுவரை வெளியான அனைத்து சர்வேக்களிலும் இடதுசாரிகள் ஆட்சி மீது கடும் அதிருப்தி இருப்பதாகவும், காங்கிரஸ் எளிதாக வெல்லும் என்றே கூறப்பட்டு இருந்தது. ஆனால், இந்த சர்வேயில் இடதுசாரி ஜனநாயக முன்னணியினருக்கும் (LDF) ஐக்கிய ஜனநாயக முன்னணியினருக்கும் (UDF) இடையே கடும் போட்டி நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது..
கேரளாவில் வாக்காளர்களைப் பாதிக்கும் காரணங்களில், வளர்ச்சி (36.13%) முதலிடத்தில் உள்ளது. ஆட்சியில் மாற்றத்தை விரும்புவதாக 16.78 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர். கொள்கை (13.54%), ஊழல் (10.18%), மற்றும் வேட்பாளரின் செயல்பாடு (9.65%) ஆகியவற்றைப் பொறுத்தும் வாக்களிக்கப் போவதாகக் கேரள மக்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் விலைவாசி உயர்வு (6.56%), சபரிமலை விவகாரம் (3.16%), மற்றும் வேலையின்மை (2.92%) ஆகியவை ஒப்பீட்டளவில் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாகச் சாதி மதம் வெறும் 0.93 சதவீதத்தை மட்டுமே பெற்றுள்ளது.
பினராயி விஜயன்
கேரளாவில் சிறந்த சட்டசபை உறுப்பினராக முதல்வர் பினராயி விஜயன் இருக்கிறார். அவரது தர்மடம் தொகுதியில் 86.45% ஆதரவை பினாராயி விஜய் பெற்றுள்ளார். அமைச்சர்களின் செயல்பாட்டில் கே.பி. கணேஷ் குமார் முதலிடம் பிடித்தார். வி. சிவன் குட்டி, முகமது ரியாஸ், வீணா ஜார்ஜ், பி. ராஜீவ் ஆகியோர் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ள மற்ற அமைச்சர்கள் ஆவர்.
மறுபுறம் காங்கிரஸ் கோட்டையில் வழக்கம் போல அதன் ஆதிக்கம் தொடர்கிறது. புதுப்பள்ளியில் உம்மன் சாண்டி 78.75% மக்கள் ஆதரவுடன் முன்னிலை வகிக்கிறார். காசர்கோடு தொகுதியில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்தாலும் அங்கு பாஜக மிக நெருக்கத்தில் வருகிறது. மறுபுறம் மன்னார்காடு (51.27%), வேங்கரா (59.20%), பெரியண்டல்மண்ணா (52.42%) ஆகிய தொகுதிகளிலும் காங்கிரஸ் தெளிவான ஆதிக்கத்தைச் செலுத்துகிறது.
ஆதிக்கம்
அதாவது இடதுசாரிகள், காங்கிரஸ் வழக்கமாக வெல்லும் தொகுதிகளில் அவர்கள் ஆதிக்கம் இருக்கிறது. ஆனால், மற்ற தொகுதிகளில் கடுமையான போட்டி இருக்கிறது. குறிப்பாகக் கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் போட்டியிடும் ஆரன்முளாவில் கடும் போட்டி நிலவுகிறது. அங்கு வீனா ஜார்ஜிற்கு 42.21% ஆதரவு இருந்தாலும் கூட காங்கிரஸ் பின்னாலேயே 39.42%) ஆதரவோடு இருக்கிறது. இருவருக்கும் வெறும் 3% வித்தியாசம் மட்டுமே உள்ளது. இப்படிப் பல தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருக்கிறது. இங்கெல்லாம் கடைசிக் கட்ட தேர்தல் பிரச்சாரத்தைப் பொறுத்து நிலைமை மாறலாம்
கேரளாவில் மொத்தம் 140 தொகுதிகள் உள்ளன. மாத்ருபூமி ஊடகம் படிப்படியாக சர்வே முடிவுகளை வெளியிட்டு வருகிறது. இப்போது வரை 96 இடங்களுக்கான சர்வே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் என இரு கட்சிகளுமே தலா 48 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. இதனால் மிகக் கடுமையான போட்டி நிலவுவது உறுதியாகிறது. எஞ்சிய தொகுதிகளின் முடிவுகளே கேரளாவை அடுத்து ஆட்சி செய்வது யார் என்பதைத் தீர்மானிக்கும்.
உள்ளே வரும் பாஜக
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் கேரளாவில் பாஜக எந்தவொரு இடத்திலும் வெல்லும் சூழல் இல்லை. ஆனாலும், பல இடங்களில் அதன் வாக்கு வங்கி கணிசமாக அதிகரித்துள்ளது. இதே நிலை போனால் சீக்கிரமே கேரளாவில் பாஜக கால் பதிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த 2024 லோக்சபா தேர்தலில் கேரளாவில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட சுரேஷ் கோபி வென்றது குறிப்பிடத்தக்கது.
-
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications