கேரளாவில் விஸ்வரூபம் எடுத்த கொரோனா- ஒரே நாளில் 292 பேருக்கு பாதிப்பு- 3 பேர் மரணம்!
திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 292 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக நாடுகளில் கொரோனா வைரஸின் புதிய திரிபான JN1 பாதிப்பு வெகுவேகமாக அதிகரித்து வருகிறது. உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 699,830,245. உலகம் முழுவதும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 6,957,853. உலக நாடுகளில் நேற்று மட்டும் மொத்தம் 21,870 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 341 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் கேரளா மாநிலத்தில் மட்டும் 292 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகி இருக்கிறது. மேலும் கொரோனாவால் கேரளாவில் 3 பேர் மரணம் அடைந்துள்ளனர். கேரளாவில் கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெற்று வருகிற ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 2041 ஆகவும் உயர்ந்துள்ளது.

இந்தியாவில் மொத்தமாக கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெறுகிறவர்கள்- ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 2311.
தமிழ்நாட்டில் நேற்று 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications