கேரளாவில் தொடர்ந்து விஸ்வரூபமெடுக்கும் கொரோனா- ஒரே நாளில் 9,347 பேருக்கு பாதிப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பாதிப்பு விஸ்வரூபமெடுத்து வருகிறது. இம்மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று மட்டும் 9437 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் கேரளா 8-வது இடத்தில் இருந்து வருகிறது. ஆனால் கொரோனா பாதிப்பு நாள்தோறும் கேரளாவில் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது.

கேரளாவில் அதிகரிப்பு
கேரளாவில் ஞாயிற்றுக்கிழமையன்று மட்டும் 9347 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் இம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கையானது 2,89,202 ஆக அதிகரித்திருக்கிறது.

கேரளா டிஸ்சார்ஜ் எண்ணிக்கை
அதேநேரத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 8924 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தும் உள்ளனர். கேரளாவில் கொரோனா டிஸ்சார்ஜ் எண்ணிக்கையும் 1,91, 798 ஆக உயர்ந்திருக்கிறது.

கேரளா மரணங்கள்
கேரளாவில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 25 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதனால் மாநிலத்தில் கொரோனா உயிரிழப்பின் எண்ணிக்கை 1,003 ஆக உள்ளது. கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்களில் அதிகபட்ச பாதிப்பு உள்ளது.

ஆக்டிவ் கேஸ்களில் 3-வது இடம்
இந்திய அளவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் - ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கையில் தற்போதைய நிலையில் கேரளா 3-வது இடத்தில் உள்ளது. கேரளாவில் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 96, 316. மகாராஷ்டிராவும் கர்நாடகாவும் ஆக்டிவ் கேஸ்களில் முதலிடத்தில் உள்ளன.

தமிழகத்துக்கு சவால்
இதனிடையே கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தமிழகத்து சவாலாக இருக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மேலும், கேரளா- தமிழக எல்லையோர மாவட்டங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பண்டிகை காலம் தொடங்கும் நிலையில் இது சவாலானதாக இருக்கு என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications