மனைவியிடம் பழகி வந்த ராஜேஷ்.. கத்தாரில் இருந்து சதி திட்டம் தீட்டி கொலை.. துப்பு துலங்கியது எப்படி?
திருவனந்தபுரம்: கேரளாவை அதிர வைத்த ரேடியோ ஜாக்கி ராஜேஷ் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் போலீசாருக்கு துப்பு துலங்கியது எப்படி என்பது குறித்த பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் தேதி அதிகாலை கொடூர கொலை ஒன்று நடைபெற்றது. திருவனந்தபுரம் அருகே உள்ள மடாவூர் கிராமத்தில் மர்ம நபர்களால் ராஜேஸ் என்ற ஆர்.ஜே (வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர்) கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கேரளா முழுவதையும் இந்தக் கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெண் ஒருவருடன் பேசி வந்த ராஜேஸ் அவரை சந்திக்க சென்னை செல்ல திட்டமிட்டு இருந்த அதே நாளில், அந்தப் பெண்ணின் கணவர் ஏற்பாடு செய்த கும்பலால் வெட்டிக்கொல்லப்பட்டது பிறகு வெளிச்சத்துக்கு வந்தது. இந்த சம்பவம் நடைபெற்று ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில், வழக்கில் குற்றவாளிகளான முகம்மது சலி மற்றும் அப்புனி என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் ராஜேஷ் குடும்பத்தினருக்கு ரூ.2.4 லட்சம் அபராதம் விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரை நீதிமன்றம் விடுவித்த அதேவேளையில், முக்கிய குற்றவாளியான, ராஜேஷ் பழகிய பெண்ணின் கணவரான அப்துல் சத்தார் இன்னும் தலைமறைவாக உள்ளார். இது குறித்து போலீசார் கூறுகையில், கத்தாரில் சத்தார் இருப்பதாகவும், அந்த நாட்டில் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டதற்காக அவர் தலைமறைவாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதுதொடர்பான வழக்கில் குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடித்தது என்பது தொடர்பான பரபரப்பு தகவல்கள் வழக்கின் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. அது குறித்து விவரம் வருமாறு:- கேரளாவில் உள்ள மலையாளம் ரேடியோ சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்த ராஜேஷுக்கும், சத்தாரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்த அவரது மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ராஜேஷை சந்திப்பதற்காக கத்தாரில் இருந்து சென்னைக்கு சத்தாரின் மனைவி வர திட்டமிட்டு இருந்து இருக்கிறார். ராஜேஷும் இதற்காக சென்னை செல்லும் திட்டத்துடன் இருந்த நிலையில், அன்று அதிகாலையே மர்ம நபரக்ள் சுற்றி வளைத்து ராஜேஷை படுகொலை செய்துள்ளனர். கொலை செய்யப்படுவதற்கு முன்பாக வரை ராஜேஷிடம் சத்தாரின் மனைவி தொலைபேசியில் பேசிக் கொண்டு இருந்துள்ளார்.
இதனால், திடீரென அலறல் சத்தம் கேட்டதால், சத்தாரின் மனைவி கேரள போலீசாருக்கு இது பற்றி தகவல் கொடுத்து இருக்கிறார். இதையடுத்தே போலீசார் நிகழ்விடத்திற்கு வந்துள்ளனர். போலீசார் இதுபற்றி கூறுகையில், மிகவும் திட்டமிட்டே இந்தக் கொலை நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. ராஜேஷை கொலை செய்வது மட்டுமே அவர்கள் குறியாக இருந்துள்ளது.
பின்னர் இந்தக் கொலை நடைபெற்ற பிறகு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கொலையாளிகள் தப்பி சென்ற காரை வைத்து விசாரணையை தொடங்கினர். இதில், அந்த காரை வாடகைக்கு எடுத்து சென்றதையும் கண்டுபிடித்தனர். ராஜேஷின் செல்பொன் அழைப்புகளை ஆய்வு செய்ததில் போலீசாருக்கு இந்தக் கொலைக்கான முழுகாரணமும் தெரியவந்தது.
ராஜேஷ் தோஹாவில் ரேடியா ஜாக்கியாக பணியாற்றிய போது சத்தாரின் மனைவிக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு இடையில் வேலை பறி போனதால் கேரளா திரும்பியிருந்த ராஜேஷ், சத்தாரின் மனைவியுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இதனால், கோபம் அடைந்த சத்தார், அவரை கூலிப்படை வைத்து கொலை செய்ததை கண்டுபிடித்தனர்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications