கேரளா அபயா கொலை வழக்கு: பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபிக்கு ஆயுள் தண்டனை
திருவனந்தபுரம்: கேரளா கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபிக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்றம்.
1992-ம் ஆண்டு கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி அபயா செயின் பயஸ் கான்வென்ட் கிணறில் சடலமாக மீட்கப்பட்டார். கேரளாவில் அபயா மரண வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முதலில் அபயா தற்கொலை செய்து கொண்டதாகவே விசாரணை அறிக்கைகள் தெரிவித்தன. பின்னர் அபயா கொலை செய்யபப்ட்டது உறுதியானது.

பாதிரியார்கள் தாமஸ் கோட்டூர், ஜோஸ் புத்ருக்கயில் ஆகியோர் கன்னியாஸ்திரி செபியுடன் தகாத உறவில் ஈடுபட்டதை நேரில் பார்த்ததால் அபயா படுகொலை செய்யப்பட்டதும் அம்பலமானது.
இந்த வழக்கில் இருந்து பாதிரியார் ஜோஸ் புத்ருக்கயில் மட்டும் 2 ஆண்டுகளுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டார். 28 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கு விசாரணையில் பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகியோர் குற்றவாளிகள் என திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்ற நீதிபதி கே. சனில்குமார் நேற்று தீர்ப்பளித்தார்.
இதனிடையே குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகியோருக்கு இன்று ஆயுள் தண்டனை விதித்து திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்ற நீதிபதி கே. சனில்குமார் உத்தரவிட்டார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications