இனி இவங்கதான்.. கேரள தலைமை செயலாளராக வேணு, போலீஸ் டிஜிபியாக ஷேக் தர்வேஸ் சாஹிப் நியமனம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள மாநில தலைமை செயலாளர் மற்றும் காவல்துறை டிஜிபியை அம்மாநில அரசு அறிவித்து இருக்கிறது.

கேரளாவில் 2 வது முறையாக பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு பதவியேற்றவுடன் தலைமை செயலாளர் மற்றும் போலீஸ் டிஜிபி ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள். அவர்களின் பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து புதிய தலைமை செயலாளர் மற்றும் டிஜிபியை தேர்வு செய்வதற்கான பணியில் அம்மாநில அரசு ஈடுபட்டது.

 Kerala State Chief Secretary and DGP of Police announced by the state government.

இந்த நிலையில் மத்திய பணியாளர் தேர்வு ஆணையமான யுபிஎஸ்சி கேரள மாநில காவல்துறை தலைவர் பதவிக்கு தகுதியான 3 போலீஸ் அதிகாரிகளை கொண்ட பட்டியலை கேரள அரசுக்கு அனுப்பி வைத்தது. இந்த நிலையில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூட்டம் கூட்டப்பட்டது.

அதில் கேரளாவில் உள்துறை கூடுதல் தலைமை செயலாளராக இருந்த வி வேணுவை தலைமைச் செயலாளராகவும், கேரள மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தலைவரான ஷேக் தர்வேஸ் சாஹிப் கேரள காவல்துறை சட்டம் ஒழுங்கு டிஜிபியாகவும் தேர்வு செய்ய முடிவெடுக்கப்பட்டது.

த்திய பணியாளர் தேர்வு ஆணையம் டிஜிபி ரேங்கில் உள்ள கே.பத்மகுமார் மற்றும் ஹரினாத் மிஸ்ரா ஆகியோரது பெயரையும் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்க பரிந்துரைத்து இருந்தது குறிபிடத்தக்கது. தற்போது நடைபெற்ற அமைச்சரவை கூட்டமே கேரள தலைமை செயலாளர் விபி ஜாயின் கடைசி கேபினட் கூட்டமாக பார்க்கப்படுகிறது.

வரும் ஜூன் 30 ஆம் தேதியுடன் அவர் ஓய்வுபெற உள்ளார். இதற்கு முன் கேரளா முதலமைச்சர் வெளிநாட்டு சுற்று பயணத்தில் இருந்ததாலும், அதன் பின்னர் ஓய்வில் இருந்து வந்ததாலும் இதற்கு முன் நடைபெற்ற 3 கேபினட் கூட்டங்களும் ஆன்லைன் வாயிலாகவே நடைபெற்று வந்தன. அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட காரணத்தால் கடந்த ஜூன் 27 ஆம் தேதி நடைபெற இருந்த அனைத்த நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில் தலைமை செயலாளர் ஜாய் ஓய்வுபெறுவதன் காரணமாக முதலமைச்சர் பினராயி விஜயன் இந்த கேபினட் கூட்டத்தில் நேரில் கலந்துகொள்ள விரும்பி இருக்கிறார். புதிய தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை டிஜிபியை முதலமைச்சரே தேர்வு செய்ய முடியும் என்றாலும், கேபினட் கூட்டத்தை கூட்டி முடிவு செய்யவே பினராயி விஜயன் விரும்பியுள்ளார்.

கேரளா மாநிலத்துடன் 2019 ஆம் ஆண்டு தேர்தலை சந்தித்த தமிழ்நாட்டில் திமுக வென்று ஆட்சியை பிடித்த நிலையில் தலைமைச் செயலாளராக இறையன்புவும், காவல்துறை டிஜிபியாக சைலேந்திர பாபுவும் நியமிக்கப்பட்டார்கள். இவர்களும் விரைவில் ஓய்வுபெற உள்ள நிலையில், இந்த பதவிகளுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யும் பணியில் தமிழ்நாடு அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+