முதல் பரிசு ரூ.10 கோடி.. கேரளாவில் அலைமோதும் லாட்டரி பிரியர்கள்.. சம்மர் பம்பரில் அதிக சேல்ஸ் எங்கே?
திருவனந்தபுரம்: கேரளாவில் சம்மர் பம்பர் லாட்டரி விற்பனை சூடுபிடித்துள்ளது. முதல் பரிசு ரூ.10 கோடி கொண்ட இந்த சம்மர் பம்பர் லாட்டரியில் மொத்தம் ரூ. 34 கோடி பரிசுத் தொகையாக அளிக்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி குலுக்கல் நடைபெறுகிறது. தங்களுக்கு இந்த முறை பரிசு அடித்துவிடாதா என்று கேரள லாட்டரி பிரியர்கள் ஆர்வத்துடன் லாட்டரியை வாங்கி செல்கிறார்கள்.
கேரளாவில் லாட்டரி டிக்கெட்டுகள் என்பது ஏகத்திற்கும் பிரபலமாக உள்ளது. கேரள அரசின் வருவாயிலும் பெரும் பங்கை லாட்டரி வகிக்கிறது. கேரளா என்றதுமே அங்குள்ள இயற்கை சூழலுக்கு அடுத்தபடியாக பலருக்கும் நினைவுக்கு வருவது லாட்டரியாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு கேரளாவில் லாட்டரி என்பது பிரபலம். நம்ம ஊரில் டீக்கடை இருப்பது போல கேரளாவில் திரும்பிய பக்கம் எல்லாம் லாட்டரி கடைகளை காண முடியும்.

சம்மர் பம்பர் லாட்டரி
கேரள லாட்டரிகளில் பம்பர் டிக்கெட்டிற்கு பல கோடி ரூபாய் பரிசுத்தொகை அளிக்கப்படுகிறது. இதனால், இந்த டிக்கெட்டுகளை கேரளாவை சேர்ந்தவர்கள் மட்டும் இன்றி கேரளாவில் உள்ள வெளி மாநிலத்தவர்கள் கூட விரும்பி வாங்குவதை காண முடியும். தற்போது அங்கு சம்மர் பம்பர் லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது. அந்த லாட்டரி டிக்கெட்டுகளுக்கு முதல் பரிசாக ரூ.10 கோடி அளிக்கப்படும். இரண்டவாது பரிசாக ரூ.50 லட்சம் ஒரு டிக்கெட்டிற்கு அளிக்கப்படும்.
மூன்றாவது பரிசாக ரூ.5 லட்சம் 12 டிக்கெட்டுகளுக்கு அளிக்கப்படும். கடைசி 5 இலக்க எண்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசுத்தொகை 54 டிக்கெட்டுகளுக்கு அளிக்கப்படும். மொத்த பரிசுத்தொகையாக ரூ.34 கோடி அளிக்கப்படுகிறது. டிக்கெட் ஒன்றின் விலை ரூ.250 ஆகும். 54 லட்சம் டிக்கெட்டுகள் மொத்தம் அச்சிடப்பட்டுள்ள நிலையில், விற்பனை தற்போது அனல் பறக்க நடைபெற்று வருகிறது. இந்த டிக்கெட்டிற்கான குலுக்கல் வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி புதன்கிழமை நடைபெறுகிறது.
பாலக்காடில் டிக்கெட் விற்பனை அதிகம்
வழக்கம் போல டிக்கெட் விற்பனையில் பாலக்காடு மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் திரிச்சூரும், மூன்றாம் இடத்தில் திருவனந்தபுரம் உள்ளது. இன்னும் 15 நாட்களுக்கு மேல் டிக்கெட்டுகள் கிட்டத்தட்ட அனைத்தும் விற்று தீர்ந்து விட வாய்ப்பு இருப்பதாக லாட்டரி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கேரளாவில் கடந்த கிறிஸ்துமஸ் நியூ பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக XD 387132 என்ற எண்ணுக்கு ரூ.20 கோடி கிடைத்தது. கண்ணூரை சேர்ந்த அதிர்ஷ்டசாலி முதல் பரிசை வென்றார்.
கேரளாவில் ஆண்டுக்கு ஆறு பம்பர் லாட்டரிகள் விற்பனை செய்யப்படுகிறது. விஷு பம்பர், மான்சூன் பம்பர், ஓணம் பம்பர், கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர், சம்மர் பம்பர் என மொத்தம் 6 பம்பர் டிக்கெடுகள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் முதல் பரிசாக ரூ.10 கோடி முதல் 25 கோடி வரை வழங்கப்படுகிறது. ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்குதான் அதிக பரிசுத்தொகையான ரூ. 25 கோடி அளிக்கப்படுகிறது. இந்த டிக்கெட்டின் விலை ரூ.500 ஆகும்.
தமிழகத்தில் விற்றால் நடவடிக்கை
கேரள லாட்டரிகளை லாட்டரிக்கு தடை உள்ள வெளி மாநிலத்தில் விற்பனை செய்வது சட்ட விரோதம் ஆகும். அந்த வகையில், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் விற்பனை செய்ய அனுமதி இல்லை. எனவே தமிழகத்தில் விற்பனை செய்தால் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பார்கள். கள்ளச்சந்தையில் வாங்கிய டிக்கெட் என்றால் கேரள அரசும் பரிசுத்தொகை வழங்க மறுக்க முடியும். கேரள லாட்டரிகளில் வெளி மாநிலத்தவர்கள் பரிசு அடித்தாலும் கூட அவர்கள் கேரளா வந்ததை உறுதி செய்த பிறகே கேரள அரசு பரிசுத்தொகையை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications