"டவுட் கேட்டு வந்த மாணவிகளிடம் பாலியல் சீண்டல்" ஆசிரியருக்கு 79 ஆண்டு ஜெயில். . கேரள கோர்ட் அதிரடி
திருவனந்தபுரம்: கேரளாவில் பள்ளிப்பாடத்தில் சந்தேகம் கேட்டு வந்த 12 வயதுக்குட்பட்ட 5 சிறுவர்-சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு 79 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து போக்சோ கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
அண்மை காலமாக பாலியல் தொல்லை தொடர்பான சம்பவங்கள் நாட்டில் அடிக்கடி நடந்து வருகின்றன.
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாலியல் சீண்டல்களுக்கு ஆளாக்கப்படுவது நாட்டில் வேதனை அளிக்கும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

ஆசிரியர்களே பாலியல் தொல்லை
குறிப்பாக பள்ளி மாணவிகளுடன் ஆசிரியர்கள் பாலியல் ரீதியிலான கொடுமைகளில் ஈடுபடுவதான சம்பவங்கள் அதிகம் நடைபெறுவது பெற்றோர்கள் மத்தியில் பெரும் பீதியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இது போன்ற குற்றங்கள் நடப்பதை தவிர்க்க நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், ஒருசில பள்ளிகளில் ஆசிரியர்கள் இது போன்ற செயலில் ஈடுபடும் சம்பவம் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இவ்வாறு பாலியல் தொல்லையில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தண்டனையும் கடுமையாக விதிக்கப்பட்டு தான் வருகிறது. அந்த வகையில் கேரளாவில் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஆசிரியர் ஒருவருக்கு 79 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாடம் சொல்லிகொடுப்பது போல்
கேரள மாநிலம் கன்னூரில் உள்ள அரசு உதவிபெறும் துவக்கப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் பி இ கோவிந்தன் நம்பூதிரி. 50 வயதான இவர் துவக்கப்பள்ளியில் கணக்கு ஆசிரியராக பணியாற்றி வருகிறார். துவக்க பள்ளியில் பயிலும் பால் மணம் மாறாத சிறுமிகளிடம், ஆசிரியர் போர்வையில் தனது கொடூர எண்ணத்தை வெளிக்காட்டியுள்ளார் இந்த ஆசிரியர். கணக்கு பாடத்தில் சந்தேகம் கேட்டு வந்த சிறுமிகள் 4 பேருக்கு பாடம் சொல்லிகொடுப்பது போல் நைசாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

போக்சோ சட்டத்தில் வழக்கு
குறிப்பாக கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டுகளில் 4 முதல் 5 ஆம் வகுப்பு படிக்கும் 12 வயதுக்கு கீழ் உள்ள 4 சிறுமிகள் ஒரு சிறுவன் என 5 பேரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். கேரளாவின் பய்யனூர் பகுதியை சேர்ந்த ஆசிரியர் கோவிந்தனின் படுபாதக செயல், சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, அவரை சிறார்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். அவருக்கு எதிரான வழக்கு விசாரணை கோழிக்கோட்டில் உள்ள தளபிரம்ப்பா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

79 ஆண்டுகள் ஜெயில்
கல்வி மையங்களில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது, தொடர்ந்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது, 12 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது ஆகிய சட்டங்களின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், 3 சட்டப்பிரிவுகளின் கீழ் பதியப்பட்ட குற்றச்சாட்டுகள் தற்போது நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு சட்டப்பிரிவுக்கும் தலா 7 ஆண்டுகள் வீதம் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன்படி பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கொடூர ஆசிரியருக்கு 79 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.2 லட்சத்து 17 ஆயிரம் அபராதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications