மதத்தை தூக்கிப் போட்டு தலைகீழாக நின்னாச்சு.. ம்ஹூம்.. பாஜகவை கும்மி எடுத்த 'கடவுளின் தேசம்' கேரளா
திருவனந்தபுரம்: இந்தியாவிலே பாஜக இடம்பெறாத ஒரே மாநில சட்டசபை என்ற சரித்திரத்தை எழுதி இருக்கிறது கடவுளின் தேசமான கேரளா. ஆம் கடவுளின் பெயரால் கட்சி நடத்தும் பாஜகவைத்தான் கடவுளின் தேசமே அம்போவென கைவிட்டு விரட்டியடித்திருக்கிறது.
கேரளாவில் இடதுசாரிகளும் காங்கிரஸும்தான் என்கிற இருதுருவ அரசியல் நாடு விடுதலை அடைந்த காலம் முதல் இருந்து வருகிறது. கேரளா வாக்காளர்களில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் சுமார் 40%க்கும் அதிகமானோர் ஆவர்.
கேரளாவில் மிக நீண்டகாலமாகவே பாஜக காலூன்ற பல முயற்சிகளை படுதீவிரமாக முயற்சித்து கொண்டே இருக்கிறது. கேரளாவில் இடதுசாரிகள் வாக்கு வங்கியான ஈழவர்களை பிரிக்கும் முயற்சியை பாஜக ஒருகட்டத்தில் மேற்கொண்டது. ஆனால் பாஜகவுக்கு கிடைத்தது தர்ம அடிதான்.

கிறிஸ்தவர் வாக்குகள்
அதன்பின்னர் தற்போதைய தேர்தலில் பிரிந்து கிடக்கும் கிறிஸ்தவர்களை வாக்கு வங்கியாக்கும் முயற்சிகளை முன்னெடுத்தது பாஜக. வடகிழக்கு மாநிலங்களில் கிறிஸ்தவர்களை அரவணைத்து காலூன்றிய பார்முலாவை கையில் எடுத்தது அந்த கட்சி. இதற்கேற்ப கேரளா கிறிஸ்தவ மிஷனரிகளும் பாஜகவுடன் இணக்கம் காட்டின.

பாஜகவுக்கு சில இடங்கள்
கேரளா சட்டசபை தேர்தலில் கிறிஸ்தவர்களையே வேட்பாளர்களாகவே நிறுத்தியது பாஜக. அதாவது இந்துத்துவா முகமூடியை மறைத்துக் கொண்டு புது வேஷம் போட்டுக் கொண்டு வாக்கு வேட்டைக்குப் போனது பாஜக. கருத்து கணிப்புகள், எக்ஸிட் போல் முடிவுகள் கூட கேரளாவில் ஒரு சில இடங்களில் பாஜகவுக்கு வெல்லும் வாய்ப்பு இருக்கிறது என கூறின.

ஜீரோதான் பரிசு
வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நேற்றைய நாளின் தொடக்கத்திலும் கூட பாஜகவுக்கும் சில இடங்கள் கிடைக்கும் என்றே கூறப்பட்டு வந்தது. ஆனால் நேரம் போகப் போக பாஜகவுக்கு கேரளாவில் முட்டையைத்தான் பரிசாக கொடுத்து வழியனுப்பி வைத்தனர் வாக்காளர்கள்.

விரட்டியடித்த கடவுள் தேசம்
கேரளாவுக்கு இன்னொரு பெயர் இருக்கிறது கடவுளின் தேசம் என்று.. அந்த கடவுளின் தேசம்தான் கடவுள்கள் பெயரால் வாக்கு வேட்டையாடும் பாஜகவை விரட்டி விரட்டி அடித்திருக்கிறது. இப்போது இந்தியாவில் பாஜக இல்லாத ஒரே மாநில சட்டசபை என்கிற சாதனை படைத்திருக்கிறது கேரளா.

கொல்லைப்புற முயற்சி
ஆனால் அதிகாரப் பசியில் எதையும் செய்ய தயாராக இருக்கும் கட்சி பாஜக. அதனால் கேரளாவில் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி, இரவல் முகமூடியோடு கொல்லைப் புறமாக சட்டசபைக்குள் நுழைவதற்கான முஸ்தீபுகளை அக்கட்சி மேற்கொள்ளாது என்றெல்லாம் அசால்ட்டாகவும் இருந்துவிடாது. ஏனெனில் கேரளா வாக்காளர்கள் பாஜகவை அந்த அளவு கும்மி எடுத்திருக்கிறார்கள். நிச்சயம் பாஜக வேறுஒருவகையில் விஸ்வரூபம் எடுக்கவே முயற்சிக்கும். என்றே எதிர்பார்க்கலாம்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications