• search
திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

உலகம் எங்க போகுது... இளைஞனை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த 45 வயது ஆண்ட்டி

|
  இளைஞனை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த 45 வயது ஆண்ட்டி- வீடியோ

  திருவனந்தபுரம்: பெண் குழந்தைகள்தான் காம வெறியர்களின் கைகளில் சிக்கி பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர் என்றால் ஆண் பிள்ளைகளுக்கும் ஆபத்து அதிகம்தான் போலிருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு 9 வயது சிறுவனை பல ஆண்டுகாலமாக பாலியல் ரீதியாக துன்புறுத்திய பெண்ணை போலீசார் கேரளாவில் கைது செய்தனர். அந்த அதிர்வலைகள் ஓயும் முன்பாக 17 வயது இளைஞனை 45 வயது பெண் ஒருவர் 2 ஆண்டுகாலமாக பலத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. அந்த பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  திருவனந்தபுரம் அருகே பொழியூரைச் சேர்ந்த அந்த பள்ளி மாணவன் திடீர் என்று மனநலம் பாதிக்கப்பட்டவன் போல நடந்து கொண்டான். அதற்கான காரணத்தை பெற்றோர்களால் அறிய முடியவில்லை. படிப்பில் நாட்டமில்லாமல் எதையோ பறிகொடுத்தது போலவே இருந்தான். ஏதாவது கேட்டால் பாத்திரங்களைத் தூக்கிப்போட்டு உடைப்பான். டிவி உடைத்தான், பெற்றோர்களை அடிக்கப்பாய்ந்தான். இதனால் பதறிப்போன பெற்றோர் சிறுவனை குழந்தைகள் நல அமைப்பினரிடம் அழைத்துச்சென்று கவுன்சிலிங் கொடுத்தனர்.

  Kerala woman abuse minor boy, booked

  மாணவனின் மனதில் என்னதான் இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளி வந்தன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி லீவு விட்டபோது சித்தி வீட்டுக்கு போயிருக்கிறான். அங்கேதான் அந்த பெண்ணை சந்தித்தான். சாதாரணமாக பேசி பழகிய சிறுவனை தொட்டு தடவி வசியம் செய்தாள்.

  இளம் வயது சிறுவனுக்கு அந்த பெண் செயல்கள் பிடித்துப்போகவே அடிக்கடி போக ஆரம்பித்தான். உடல் ரீதியான தொடர்புகள் அதிகரித்தது. கோடை விடுமுறை முடிந்து சொந்த வீட்டுக்கு வந்த பின்னரும் அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்தான். சனி ஞாயிறு வந்தாலே சித்தி வீட்டுக்கு போக ஆரம்பித்தான் அந்த சிறுவன். சில நாட்கள் பள்ளிக்கு கூட போகாமல் அந்த பெண் வீட்டிற்கு போக தொடங்கினான்.

  பத்தாம் வகுப்பில் ஒருவழியாக பாஸ் செய்து விட்டு ப்ளஸ் 1 சித்தி வீட்டில் தங்கி படிக்கப் போவதாக கூறினான், ஆனால் அதற்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரப்பட்ட அவன், மனநலம் பாதிக்கப்பட்டவன் போல நடந்து கொண்டான். மாணவனிடம் விசாரணை நடத்திய குழந்தைகள் நல அமைப்பினர், இந்த தகவலை பொழியூர் காவல்நிலையத்தில் தெரிவித்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுவனிடம் விசாரணை நடத்தியதோடு திருவனந்தபுரம் குற்றவியல் மாஜிஸ்திரேட் முன்பு அழைத்து சென்று வாக்குமூலம் பெற்றனர்.

  அந்த சிறுவனுக்கு மருத்துவ பரிசோதனையும் நடைபெற்றது. குற்றம்சாட்டப்பட்டுள்ள அந்த பெண்ணுக்கு எதிராக போக்சோ சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பெண் குழந்தைகள் மட்டுமல்ல ஆண் பிள்ளைகளையும் பத்திரமாக பாதுகாக்க வேண்டியது பெற்றோர்களின் கடமைதான்.

  கேரளாவில் கடந்த பிப்ரவரி மாதம் 9 வயது சிறுவனை மாமாவின் மனைவியே பாலியல் ரீதியாக துன்புறுத்தி அவனது மனநலம் பாதிக்கக் காரணமானார். அந்தப்பெண் கைது செய்யப்பட்டு கம்பி எண்ணுகிறார். இதே போல 17 வயது சிறுவனுடன் தகாத உறவில் ஈடுபட்ட பெண் விரைவில் கைது செய்யப்படுவார். எந்த குழந்தையாக இருந்தாலும் அவர்களின் நடவடிக்கையில் இலேசான மாற்றங்கள் தெரிந்தாலே மருத்துவர்களின் ஆலோசனை பெற வேண்டும் என்று குழந்தைகள் நல அமைப்பினர் கூறியுள்ளனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Police have registered a case against a 45 year old woman for allegedly sexual abuse a 17 year old boy.According to Childline, the boy was subjected to sexual abuse for more than year.The boy was sexually misused by the woman for several years.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more