ஞானேஷ் குமார் எனக்கு பாஜகவில் எம்பி பதவி வாங்கி தருவதாக கூறினார்! பகீர் கிளப்பிய ஐஏஎஸ் அதிகாரி!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை செயலாளர் ஞானேஷ் குமாருக்கு எதிராக தற்போது புதிய சர்ச்சை கிளம்பியிருக்கிறது. அவருடன் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி மற்றொரு அதிகாரியான ஜிஜி தாம்சன், தனக்கு பாஜக எம்பி பதவி வாங்கித்தருவதாக ஞானேஷ் குமார் கூறினார் என்று தெரிவித்திருக்கிறார். இது ஞானேஷ் குமார் மீதான விமர்சனங்களை அதிகரித்திருக்கிறது.

இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஒரு தலைமை ஆணையரும், இரண்டு ஆணையர்களும் இருக்கிறார்கள். தலைமை ஆணையர்தான் ஞானேஷ் குமார். என்னதான் தலைமை ஆணையராக இருந்தாலும் அவரால் தனியாக எந்த முடிவையும் எடுத்துவிட முடியாது. மற்ற இரண்டு ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோரை கலந்தாலோசித்துதான் முடிவெடுக்க முடியும். ஆனால் ஞானேஷ் குமார் அப்படி நடந்துக்கொள்வில்லை, தன்னிச்சையாக SIR விஷயத்தில் முடிவெடுத்திருக்கிறார் என்பதுதான் குற்றச்சாட்டு.

Keralam

இந்த விஷயத்தில் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடியை தூக்கியிருக்கின்றன. குறிப்பாக காக்ரோச் ஜனதா கட்சி இந்த விஷயத்தில் தீவிரமாக இறங்கியிருக்கிறது.

இது ஒரு பக்கம் என்றாலும், மறுபுறம் ஞானேஷ் குமாருக்கு எதிராக மற்றொரு குற்றச்சாட்டு வெடித்திருக்கிறது. அதாவது, கேரள மாநிலத்தின் முன்னாள் தலைமை செயலாளரும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான ஜிஜி தாம்சன் அளித்துள்ள பேட்டியில், ஞானேஷ் குமார் ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் இருந்த காலத்தில் தனக்கு பாஜக சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட சீட் தருவதாக ஆஃபர் செய்தார் என்று பகிர் கிளப்பியிருக்கிறார்.

இது, ஞானேஷ் குமார் தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுவதற்கு முன்பிருந்தே அவருக்கும் ஆளும் பாஜகவுக்கு இடையே நெருங்கிய தொடர்பு இருந்தது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இந்த செய்தியை தனது x தளத்தில் பகிர்ந்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஞானேஷ் குமார் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

முதலில் ஞானேஷ் குமார் ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் இருந்தபோதே, பாஜகவிற்கான ஆட்களை தேர்வு செய்யும் இடைத்தரகராக பயன்படுத்தப்பட்டார். அதன் பின்னர், பிரதமர் நரேந்திர மோடியும் அமித்ஷாவும் அவரை தேர்தல் களத்தின் நடுவராக்கி இந்திய தேர்தல்களில் தங்களுக்கு சாதகமாக மேட்ச்-பிக்சிங் செய்யும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்துள்ளனர் என்று ராகுல் காந்தி பகிரங்கமாக சாடியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+