அமைச்சரவையில் மீண்டும் இடம் கிடைக்காதது வருத்தமா?.. இதுக்கு ஷைலஜா டீச்சரின் செம பதிலை பாருங்க!
திருவனந்தபுரம்: கேரள சுகாதாரத்துறை ஒரு கூட்டு அமைப்பு என்றும் தனிப்பட்ட நபரை நம்பி இல்லை என்றும் கே.கே.ஷைலஜா தெரிவித்தார்.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி(எல்.டி.எஃப்) அசுர வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.

எல்.டி.எஃப் அரசு
கேரள முதல்வராக பினராயி விஜயன் நாளை மறுதினம் பதவியேற்க உள்ளார். பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி(எல்.டி.எஃப்) அரசின் அமைச்சரவை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. முதல்வர் பினராயி விஜயனை தவிர பழைய அமைச்சர்கள் யாருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

புதுமுகங்களுக்கு வாய்ப்பு
மொத்தம் வெளியிடப்பட்ட 21 அமைச்சர்கள் பட்டியலில் அனைவரும் புதுமுகங்கள்தான். இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால் கேரளா சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த கே.கே.ஷைலஜாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதுதான். ஏனெனில் நிபா வைரஸ், கொரோனா வைரஸ் காலங்களில் மிகச் சிறப்பாக பணியாற்றியவர் ஷைலஜா.

ஷைலஜா டீச்சருக்கு இடமில்லை
கொரோனா முதல் அலையில் கேரளா சுகாதாரத்துறை எடுத்த நடவடிக்கை உலக அளவில் பாராட்டை பெற்றது. ஏன் ஐ.நா. அமைப்பே பாராட்டுக்கும் அளவுக்கு கேரள சுகாதாரத்துறையை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றார் ஷைலஜா டீச்சர். இதனால் அவர்தான் மீண்டும் சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பார் என்று அனைவரும் கருதி வந்த நிலையில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது பல்வேறு தரப்பினரையும் ஏமாற்றத்தை அளித்தது.

திருப்தி அடைகிறேன்
பழையவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது என்ற இடதுசாரிகள் கட்சியின் விதிமுறை காரணமாக ஷைலஜா டீச்சருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் கேரள அமைச்சரவையில் மீண்டும் வாய்ப்பு வழங்காதது குறித்து ஷைலஜா டீச்சரிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அரசின் முடிவு உங்களுக்கு வருத்தம் அளிக்கிறதா? என்று கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:- கட்சியுடன் முடிவை முழு மனதாக ஏற்கிறேன். கட்சி என்னை அமைச்சராக நியமித்தது. ஒரு அமைச்சராக, எனது கடமைகளை திருப்தியுடன் முடித்துள்ளேன். அடைகிறேன். எனது பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்றியுள்ளேன்.

தனி நபரை நம்பியல்ல
புதிய அமைச்சரவைக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். புதிய அமைச்சரவை அணி மிகச் சிறந்த ஒன்றாக இருக்கும். அவர்களால் மாநிலத்தில் சிறந்த நிர்வாகத்தை உறுதிப்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன். அமைச்சரவையிலிருந்து நான் வெளியேறுவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பாதிக்கப்படாது. ஏனெனில் கேரள சுகாதாரத்துறை ஒரு தனிநபரை மட்டும் நம்பி அல்ல. இது ஒரு முழுமையான அமைப்பாகும். என்னைத் தவிர, முதலமைச்சர் தலைமையிலான ஒரு பெரிய குழுவே மாநிலத்தில் கொரோனா தடுப்பைக் கையாண்டது' என்று கூறினார் ஷைலஜா டீச்சர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications