ராக்கிளி பொன்மகளே.. மகள் திருமண கச்சேரியில் நெகிழ்ச்சியுடன் பாடிய கொல்லம் எஸ்ஐ.. மயங்கி விழுந்து பலி
Recommended Video
திருவனந்தபுரம்: திருமணத்தின் போது இசைக்கச்சேரியில் மகளுக்கு பிடித்த பாடலை பாடிய போது மயங்கி விழுந்த கொல்லம் போலீஸ் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
திருவனந்தபுரத்தில் உள்ள காரமனா காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக இருந்தவர் விஷ்ணுபிரசாத் (55). இவரது இளைய மகள் ஆர்ச்சாவின் திருமண ஏற்பாடுகளை ஜரூராக கவனித்து வந்தார்.
இந்த நிலையில் திருமணத்துக்கு முந்தைய நாள் பாட்டுக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கச்சேரியில் கலைஞர்கள் பாடல்களை பாடிக் கொண்டிருந்தனர்.

அமரம் படப்பாடல்
அபப்போது விஷ்ணுபிரசாத்தும் நன்றாக பாடக் கூடியவர் என்பதால் அவரது நண்பர்களை அவரை பாடுமாறு கேட்டனர். இதையடுத்து அமரம் படத்தில் மகளுக்காக தந்தை மம்முட்டி பாடிய பாடலான ராக்கிளி பொன்மகளே என்ற பாடலை பாடினார்.

மயங்கிய விஷ்ணுபிரசாத்
அப்போது திடீரென மேடையில் இருந்து சரிந்து விழுந்தார். இதை பார்த்த ஆர்ச்சா கதறி அழுதார். உடனே உறவினர்கள் ஆர்ச்சாவுக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு விஷ்ணு பிரசாத்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

விஷ்ணுபிரசாத்
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர். இதையடுத்து மறுநாள் திருமணம் என்பதால் இந்த தகவலை கேட்டால் இளைய மகள் துக்கத்தில் திருமணத்தை நிறுத்திவிடுவார் என்பதாலும் இது திருமணம் என்பது விஷ்ணுபிரசாத்தின் ஆசை என்பதாலும் அவரது இறப்பை யாரிடமும் தெரிவிக்காமல் இருக்க முடிவு செய்தனர்.

ஆறுதல்
இதையடுத்து ஆர்ச்சாவிடம் தந்தை நலமுடன் இருப்பதாகவும் திருமணத்துக்கு வந்துவிடுவார் என்றும் கூறி தேற்றி வந்தனர். இந்நிலையில் தாலி கட்டும் போது வராததால் ஆர்ச்சா கண் கலங்கி தந்தையை தேடினார். பின்னர் திருமணம் முடிந்தவுடன் அவரிடம் விஷயத்தை சொன்னவுடன் கதறி அழுத காட்சி காண்போரை உருக வைத்தது.
சோகம்
கடைசி மகளின் திருமணம் என்பதால் பல லட்சங்களை கொட்டி கொடுத்து திருமண ஏற்பாடுகளை செய்த விஷ்ணுபிரசாத், பெண்ணிக்கு தான் ஆசையாய் பார்த்த மாப்பிள்ளை தாலி கட்டியதை கூட பார்க்க முடியாமல் போனதை நினைத்து உறவினர்கள் சோகம் கொண்டனர்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications