எங்க ஓடுற.. காரினை வழிமறித்த லட்சுமி மேனன்.. தோழியுடன் சேர்ந்து ரகளை.. வெளியான வீடியோ!
எர்ணாகுளம்: கேரளாவில் ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய விவகாரத்தில் நடிகை லட்சுமி மேனன் தலைமறைவாகி இருக்கிறார். இந்த நிலையில் நடிகை லட்சுமி மேனன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஐடி ஊழியரின் காரினை வழிமறித்து தகராறில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் சுந்தர பாண்டியன், கும்கி, குட்டிப் புலி, பாண்டிய நாடு, கொம்பன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை லட்சுமி மேனன். அதிகளவில் கிராமத்து கதாபாத்திரங்களில் நடித்திருப்பதால், சாமானிய மக்களிடையே அதிக பிரபலம் அடைந்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சினிமா பட வாய்ப்புகள் இல்லாமல், கேரளாவில் குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள மதுபான விடுதியில் தகராறு ஒன்று நடந்துள்ளது. அந்த தகராறில் நடிகை லட்சுமி மேனன் சம்மந்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. ஐடி ஊழியர் அலியார் ஷா சலீம் என்பவரை காரில் கடத்தி சென்று லட்சுமி மேனன் மற்றும் அவரின் நண்பர்கள் மூன்று பேர் தாக்குதல் நடத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்பின் இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், லட்சுமி மேனனுடன் காரில் சென்ற அவரது நண்பர்கள் மிதுன், அனீஷ் மற்றும் ஒரு பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன்பின் நடிகை லட்சுமி மேனனை விசாரணைக்காக போலீசார் தொடர்பு கொண்டுள்ளனர்.
ஆனால் லட்சுமி மேனன் தலைமறைவாகி இருக்கிறார். இதன் காரணமாக போலீசார் லட்சுமி மேனனை தேடி வருகின்றனர். அதேபோல் லட்சுமி மேனன் தோழி ஒருவர் அளித்த புகாரின் பேரில் எதிர்த் தரப்பில் இருந்தும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் நடிகை லட்சுமி மேனன் காரினை மறுத்து ஐடி ஊழியருடன் தகராறில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி இருக்கிறது.
https://x.com/Idam_valam/status/1960618600063975901
அந்த வீடியோவில் நடிகை லட்சுமி மேனன் மற்றும் அவரது பெண் தோழி ஒருவரும் காரினை மறித்து தகராறு செய்துள்ளனர். அந்த வீடியோவில் பெண் தோழி போதையில் இருப்பதாக தெரிகிறது. இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து நடிகை லட்சுமி மேனனை சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications