முதல் முறையாக மலர்ந்தது தாமரை.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றிய பாஜக.. கம்யூ - காங் பேரிடி
திருவனந்தபுரம்: கேரளா தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலில் ஆளும் இடதுசாரிகளின் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான காங்கிரஸ் கட்சியை பின்னுக்கு தள்ளி அதிக இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த மாநகராட்சி இடதுசாரிகளின் கூட்டணியின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் தற்போது முதல் முறையாக பாஜக வசமாகி உள்ளது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பினராயி விஜயன் செயல்பட்டு வருகிறார். இந்த ஆளும் கூட்டணிக்கு எல்டிஎப் என்று அழைக்கப்படுகிறது. எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு யூடிஎப் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கேரளாவில் தனது செல்வாக்கை அதிகரிக்கும் முனைப்பில் பாஜகவும் செயல்பட்டு வருகிறது. பாஜக என்டிஏ கூட்டணியாக செயல்பட்டு வருகிறது. கேரளாவில் கிராம பஞ்சாயத்து, பிளாக் பஞ்சாயத்து, மாவட்ட பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி என்று அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கடந்த 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடந்தது.
இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள மாநகராட்சியில் விறுவிறுப்பாக ஓட்டு எண்ணிக்கை நடந்தது. காலை முதலே பாஜகவினர் அதிகமான வார்டுகளில் முன்னிலை வகிக்க தொடங்கினர்.
மாலை 3 மணியளவில் திருவனந்தபுரம் மாநகராட்சியின் முழு ரிசல்ட் வெளியானது. திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் 50 வார்டுகளில் வெற்றி பெற்றனர். ஆளும் இடதுசாரிகளின் கூட்டணி வேட்பாளர்கள் 29 வார்டுகளிலும், காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் 19 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
மாநகராட்சியில் மொத்தமுள்ள 101 வார்டுகளில் மெஜாரிட்டிக்கு 51 வார்டுகளில் வெல்ல வேண்டும் என்ற நிலையில் பாஜக கூட்டணி 50 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் ஒரு இடம் தேவையாக உள்ள நிலையில் காங்கிரஸ் - இடதுசாரி கூட்டணியின்றி பிற கட்சிகளில் போட்டியிட்டு வென்ற 2 பேரின் ஆதரவை பாஜக பெற்று மாநகராட்சியை கைப்பற்றுகிறது. 2020 தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை இடதுசாரிகளின் கூட்டணி கைப்பற்றிய நிலையில் இப்போது அதனை பாஜகவிடம் இழந்துள்ளது.
இங்கு எல்டிஎஃப் கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 70 வார்டுகளில், இந்திய கம்யூனிஸ்ட் 17 வார்டுகளிலும், கேரளா காங்கிரஸ் (எம்), ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சிகள் தலா 3 வார்டுகளிலும், மதசார்பற்ற ஜனதாதளம் 2 வார்டுகளிலும், இந்திய தேசிய லீக், மதசார்பற்ற காங்கிரஸ், கேரளா காங்கிரஸ் (பி), ஜனதிபாத்யா கேரளா காங்கிரஸ், என்சிபி (சரத்பவார் அணி), ஜனதிபாத்யா சம்ரக்ஷனா சமிதி உள்ளிட்ட கட்சிகள் தலா ஒரு வார்டுகளிலும் களமிறங்கினர்.
காங்கிரஸ் கட்சியின் யுடிஎஃப் கூட்டணியை எடுத்து கொண்டால் காங்கிரஸ் கட்சி 88 வார்டுகளில் களமிறங்கி உள்ளது. கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி 5 வார்டுகளிலும், இந்தியன் யூனியன் முஸ்லிம் கட்சி 4 வார்டுகளில், கேரளா காங்கிரஸ் மற்றும் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி தலா 2 வார்டுகளிலும் போட்டியிட்டது. மாறாக பாஜக கூட்டணியை எடுத்து கொண்டால் பாஜக 96 வார்டுகளில் களமிறங்கி உள்ளது. பாரத் தர்மா ஜனசேனா கட்சிக்கு 3 வார்டுகளும், கேரளா காமராஜ் காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகளுக்கு தலா ஒரு வார்டுகளும் வழங்கப்பட்டுள்ள நிலையில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று முதல் முறையாக திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ்












Click it and Unblock the Notifications