Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பூர் போல் திருவனந்தபுரத்தில்.. 200 பவுன் தங்கம் தந்தும்.. 25 நாளில் முடிந்த கல்யாண வாழ்க்கை

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: என்ன தான் இன்று படித்து உயர் பதவியில் இருந்தாலும், நன்கு சம்பாதித்து சொத்துக்களை சேர்த்து வைத்திருந்தாலும், எல்லாரும் சமம், பெண்களுக்கு சம உரிமை உள்ளது என்று பேசினாலும், திருமணத்தின் போது சாதி பார்ப்பதும், வரதட்சணை வாங்குவதும் தொடர்கிறது. வசதி மற்றும் அந்தஸ்திற்கு தகுந்தாற் போல் வரதட்சணை கேட்கிறார்கள். திருமணம் ஆகி 25 நாட்களில் ஒரு ஜோடி திருவனந்தபுரத்தில் பிரிந்துள்ளது. 200 பவுன் கொடுத்தும், அதிக வரதட்சணை கேட்டதால் , இளம்பெண் தாயுடன் எடுத்த முடிவு ஆடிப்போக வைத்துள்ளது. கணவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரம் கமலேஸ்வரத்தை சேர்ந்த ராஜீவ் என்பவர வேளாண்துறை அதிகாரியாக பணியாற்றி வந்த நிலையில் ஓய்வு பெற்றுள்ளார். இவருடைய மனைவி சஜிதாவுக்கு 54 வயது ஆகிறது. இவர்களது மகள் கிரீமாவுக்கு 30 வயது ஆகிறது. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த உன்னி கிருஷ்ணனுக்கும், கிரீமாவுக்கும் 6 வருடம் முன்பு திருமணம் நடந்தது. 200 பவுன் நகை மற்றும் வீடு சீர்வரிசையாக பெண் வீட்டார் சார்பில் மாப்பிள்ளை வீட்டாருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

Like in Tiruppur a married life that ended despite 1 6 kg gold being given in Thiruvananthapuram

பேசுவதை தவிர்த்த கணவன்

ஆனால் மாப்பிள்ளை வீட்டில் வரதசட்ணை விஷயத்தில் திருப்திபடவில்லை. திருமணத்திற்கு பிறகும் கூடுதல் வரதட்சணை கேட்டு உன்னி கிருஷ்ணன், கிரீமாவை கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதுதொடர்பாக தகராறு வலுத்த நிலையில் திருமணம் முடிந்த 25-வது நாளிலேயே மனைவியை விட்டு உன்னி கிருஷ்ணன் பிரிந்ததோடு, வெளிநாடு சென்று விட்டார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. கிரீமாவுடன் பேசுவதையும் தவிர்த்துவிட்டார்.

மனம் திருந்தாத மருமகன்

எப்படியும் மனம் திருந்தி மருமகன் உன்னி கிருஷ்ணன் வருவார், தனது மகளுடன் வாழ்வார் என்ற நம்பிக்கையில் சஜிதா இருந்தார். அவரது மகள் கிரீமாவையும் சமாதானப்படுத்தி வந்தார். ஆனால் மருமகன் உன்னிகிருஷ்ணனின் பிடிவாதத்தால் அவமானமே மிஞ்சியதாம். ஆறு வருடங்களாகவே உன்னி கிருஷ்ணன் வரவேயில்லை. இதற்கிடையே கடந்த 3 மாதத்துக்கு முன்பு ராஜீவ் திடீரென இறந்து விட்டார். இதனால் தாயும், மகளும் வாழ்க்கையில் வெறுப்படைந்த நிலைக்கு சென்றனர்.

ஆறு வருட காத்திருப்பு

இதற்கிடையே உன்னி கிருஷ்ணனின் உறவினர் இறந்து விட்டார். இந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க உன்னி கிருஷ்ணன் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளார். இதனை அறிந்த சஜிதா, கிரீமாவுடன் அங்கு சென்றிருக்கிறார்கள். அப்போது உறவினர்கள் கிரீமாவையும், உன்னி கிருஷ்ணனையும் சேர்த்து வைக்க முயற்சி செய்தனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. அப்போது உன்னி கிருஷ்ணன் அவதூறாக பேசியதாகவும் தெரிகிறது. அதன்பிறகு தாயும், மகளும் வேதனையில் வீடு திரும்பினர்.

வாட்ஸ் அப்பில் தகவல்

உன்னி கிருஷ்ணனின் செயல்களால் மன அழுத்தததிற்கு ஆளான கிரீமா வேதனை அடைந்தாராம். அதில் தவறான முடிவெடுத்து வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாம் என முட்டாள்தனமாக முடிவு செய்தாராம். கிரீமா மட்டுமின்றிதாயும் அதே முடிவு எடுக்க விரும்பினாராம். . நேற்றுமுன்தினம் உறவினர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் வாழ்க்கையை முடித்துக் கொள்ளப்போவதாக தகவல் கூறி விட்டு இருவரும் சயனைடு தின்று வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டனர்.

உருக்கமான கடிதம் சிக்கியது

இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 பேருடைய உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறுதியாக சஜிதா எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அதில் கூறுகையில், எனது மகள் கிரீமா உடன் திருமணம் முடிந்து 25 நாட்கள் மட்டுமே உன்னி கிருஷ்ணன் வாழ்ந்தார். பின்னர் உடுத்திய ஆடையை கழற்றி வீசுவது போல், எனது மகளை தனிமைப்படுத்தி விட்டு சென்ற உன்னி கிருஷ்ணன் இதுவரை வீட்டுக்கு வரவில்லை. மகள் பல முறை கெஞ்சி அழுதும் பயனில்லை.

வரதட்சணை கொடுத்தோம்

திருமணத்தின் போது தேவைக்கு அதிகமாகவே வரதட்சணை வழங்கப்பட்டது. இனி எங்களுக்கு வாழ பிடிக்கவில்லை. நாங்கள் இறந்த பிறகு, எங்களது சொத்துக்களில் ஒரு கைப்பிடி மண்ணை கூட உன்னி கிருஷ்ணனோ, அவர்களது உறவினர்களோ அனுபவிக்கக் கூடாது. எங்களது சொத்துக்களை எனது சகோதரர்களுக்கு கொடுப்பது தான் நல்லது. எனது மகளுக்கும், அதில் சம்மதம்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது..

உன்னி கிருஷ்ணன் கைது

இதுதொடர்பாக தற்கொலைக்கு தூண்டியதாக உன்னி கிருஷ்ணன் மீது திருவனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை அறிந்த உன்னி கிருஷ்ணன் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல திட்டமிட்டார். இதற்காக மும்பை விமான நிலையத்துக்கு சென்ற அவர் அங்கிருந்து வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற நிலையில் திருவனந்தபுரம் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்

Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).

மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).

ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.

AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+