பாஜகவுக்கு சரித்திரத்திலேயே முதல் முறையாக ஒரே ஒரு தொகுதி கிடைக்குமா? லோக்சபா தேர்தல்களும் கேரளாவும்!
திருவனந்தபுரம்: தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் முதல் முறையாக ஒரே ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற்று சரித்திரம் படைக்க வேண்டும் என போராடுகிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு.
லோக்சபா தேர்தல்களுக்கான முதல் வேட்பாளர்கள் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. இதில் கேரளாவின் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.

தென்னிந்தியாவில் பாஜக தமது கணக்கை தொடங்காத மாநிலமாக அதாவது இத்தனை லோக்சபா தேர்தல்களிலும் ஒரே ஒரு இடத்தைக் கூட பாஜகவால் பெற முடியாத மாநிலமாக கேரளா இருந்து வருகிறது.
1989 முதல் 1999 வரை பாஜக: 1989-ம் ஆண்டு முதல் கேரளா பாஜக போட்டியிட்டு வருகிறது. 1989-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் கேரளாவில் பாஜக மொத்தம் 19 தொகுதிகளில் போட்டியிட்டது. இத்தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான UDF-க்கு 49.29% வாக்குகளும் இடதுசாரிகள் கூட்டணிக்கு 42.93% வாக்குகளும் கிடைத்தன. கேரளாவில் எதிர்கொண்ட முதல் தேர்தலில் பாஜக 4.51% வாக்குகளைப் பெற்றது. 1991-ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணிக்கு 48.59%; இடதுசாரிகள் கூட்டணிக்கு 44.28% வாக்குகள் கிடைத்தன. பாஜகவுக்கு 0.10% வாக்குகள் கூடுதலாக 4.61% வாக்குகள் கிடைத்தன. 1996-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் கேரளாவில் பாஜக 18 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த தேர்தலிலும் கூட பாஜகவுக்கு 5.61% வாக்குகளே கிடைத்தன. தொடர்ந்தும் காங்கிரஸ் கூட்டணி 45.75%, இடதுசாரிகள் கூட்டணி 44.87% வாக்குகளைப் பெற்றன. 1999-ல் பாஜக 6.6% வாக்குகளைப் பெற்றது.
10% வாக்குகளைத் தொட்ட பாஜக: 2006 லோக்சபா தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணிக்கு 46.9% வாக்குகள் கிடைத்தன. இடதுசாரிகள் கூட்டணியின் வாக்கு சதவீதம் லேசான சரிவை எதிர்கொண்டது. இடதுசாரிகளுக்கு 43.7% வாக்குகள் கிடைத்தன. பாஜகவுக்கு இம்முறை 7.9% வாக்குகள் கிடைத்தன. 2006-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக முதல் முறையாக 10% வாக்குகளை எட்டியது. அத்தேர்தலில் பாஜகவுக்கு 10.38% வாக்குகள் கிடைத்தன. 2004-ம் ஆண்டு தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி 15 இடங்களில் வென்றன. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட ஜெயிக்கவில்லை.
2009-ல் மீண்டெழுந்த காங்கிரஸ்: 2009 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் உயிர் பெற்று 13 இடங்களைக் கைப்பற்றியது. 40.14% வாக்குகளை காங்கிரஸ் பெற்றது. இத்தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் சரிபாதியாக அடி வாங்கி சறுக்கியது. 2009 லோக்சபா தேர்தலில் கேரளாவில் 6.31% வாக்குகளை மட்டும் பெற்றது பாஜக.
2014, 2019 தேர்தல்கள்: ஆனால் 2014 தேர்தலில் பாஜக மீண்டும் 10.83% எட்டியது. 2009 தேர்தலில் பாஜக கூடுதலாக 2.67% வாக்குகளைப் பெற்று 13% ஓட்டுகளைப் பெற்றது. 2019 தேர்தலில் பாஜக, பாரத் தர்ம சேனா என்ற பெயரிலான ஈழவ ஜாதியினரின் கட்சி, கேரளா காங்கிரஸ் (மணி) கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்தது. 2019-ல் கேரளாவில் பாஜக 15 இடங்களில் போட்டியிட்டு 13% வாக்குகளைப் பெற்றது.
கேரளா நிலவரம்: கேரளாவைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கூட்டணி, இடதுசாரிகள் கூட்டணி சமமான வாக்கு வங்கியைப் பெற்றிருக்கின்றன. அத்தனை தேர்தல்களிலும் முஸ்லிம் லீக் சில தொகுதிகளில் வென்று வருகிறது. பாஜகவால் போராடி தற்போதைய நிலையில் அதிகபட்சமாக 13% வாக்குகளைத்தான் பெறவும் முடிந்திருக்கிறது.
2024 தேர்தல் களம்: 2024 லோக்சபா தேர்தலில் இந்த வாக்கு சதவீதத்தை அதிகரித்து ஒரே ஒரு இடத்தையாவது பெற்றுவிட வேண்டும் என்பதில் படுமுனைப்புடன் இருக்கிறது பாஜக. பாஜகவின் இந்த நெடும் போராட்டத்துக்கு கேரளாவின் பலன் கிடைக்குமா? இல்லையா? என்பது மே மாதத்தில் தெரிந்துவிடும்!
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications